Headlines

புலவர் திருநாவுக்கரசின் மறைவு மன்னார் மக்களுக்கு பாரிய இழப்பாகும்.

மன்னார் மாவட்டத்தின் திருக்கேதீஸ்வர ஆலய அறங்காவலர் சபை இணைச்செயலாளர் புலவர்  அம்பலவாணர் திருநாவுக்கரசு (சமாதான நீதவான்) மறைவு இந்துக்களுக்கு மாத்திரமன்றி அந்த மாவட்டத்தில் வாழும் ஏனைய இன மக்களுக்கும் கவலை தருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். தமிழிலே நன்கு புலமையும், பாண்டித்தியமும் பெற்ற அமரர் திருநாவுக்கரசு சைவத்தின் மேன்மைக்காக தன்னை அர்ப்பணித்து வாழ்ந்தார். மன்னார் மாவட்டத்தில் இந்து, இஸ்லாமிய கிரிஸ்தவ மக்களின் இன நல்லுறவை வலுவாக்கும் வகையில் அவரது செயற்பாடுகள்…

Read More

முசலிப்பிரதேசபையின் வரவுசெலவு திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்….

முசலிப்பிரதேசபையின் தவிசாளர் கலீபத் சுபியான் அவர்களினால் (11/12.2018 ) சபையில் முன்வைக்கப்பட்ட 2019ம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்… அகில இலங்கை மக்கள் காங்கிரசின் ஆளுகைக்குள் இருக்கும் முசலிப்பிரதேசபையில் , முஸ்லீம் காங்கிரஸ், தமிழ் தேசியக்கூட்டமைப்பு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, சுதந்திரக்கட்சி ,பொதுஜன பெரமுன, உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் முசலிப்பிரதேசபையில் தவிசாளரினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத்திட்டம் எந்தவித எதிர்ப்பும் இன்றி நிறைவேறியது விசேஷட அம்சமாகும்… முசலிப்பிரதேசபையின் தவிசாளர் கலிபத் சுபியான் அவர்களினால் எதிர்காலத்தில் எமது பிரதேசபையின்…

Read More

மன்னார் பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது

தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் தலைமையில் இடம்பெற்ற 2019 ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட விவாதம் இன்று மன்னார் பிரதேச சபையில் இடம்பெற்றதுடன் அதற்கான வாக்கெடுப்புகளும் இடம்பெற்றன, மன்னார் பிரதேச சபையானது அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கட்டுப்பாட்டில் இருந்தபோதும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர் ஜீவானந்தன் அவர்களினால் வரவு செலவுத்திட்டத்தின் விவாதத்திற்கு ஆதரவாக முன்மொழியப்பட்டதுடன் சிறீலங்க சுதந்திரக்கட்சியின் உறுப்பினர் அலியார் ஸாபிர் அவர்களினால் வழி மொழியப்பட்டு வரவு செலவுத்திட்டம் வெற்றி பெற்றுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரசின் இந்த வரவு…

Read More

மைச்சர் றிஷாட்டின் பாதுகாப்பை பலப்பலப்படுத்துமாறு இறக்கமத்தில் அழுத்தம்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,முன்னால் அமைச்சருமான றிஷாட் பதியுதீனின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு இறக்காமம் பிரதேச சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளன. இறக்காமம் பிரதேச சபையின் உப தவிசாளர் இப்பிரேரணையை சபையில்  சமர்ப்பித்து உரையாற்றினார், இதில் முஸ்லிம் சமூகத்தின் தேசிய அளவிலான தலைவராக றிசாட் பதியுதீன் மக்களால் பார்க்கப்படுகிறார். அ.இ.ம.கா கட்சி தற்போது மக்களின் ஆதரவை அதிகம் பெற்ற கட்சியாகவும் ,அதன் தலைவரான றிசாட் பதியுதீன் சிறந்த தலைவராக சமூகம் ஏற்று அரசியலில் பின்பற்றுகிறது. எமது முஸ்லிம்…

Read More

இராணுவத்தினர் வசமிருந்த 12 ஏக்கர் காணி விடுவிப்பு!

திருகோணமலை மாவட்டத்தில் இராணுவத்தின் வசமிருந்த 12 ஏக்கர் காணிகள் நேற்று (10) கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவினால் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவிடம் கையளிக்கப்பட்டது. இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஃரூப், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார, அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்கள அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர். திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட கல்லம்பத்தை எனும் பகுதியில் 5 ஏக்கர் காணி,…

Read More

ஓட்டமாவடி பிரதேச சபையின் 2019ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்!

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் கலந்துகொண்ட 12 பேரின் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. ஓட்டமாவடி பிரதேச சபையின் 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், வியாழக்கிழமை மாலை நடைபெற்ற விஷேட சபை அமர்வில் தவிசாளர் ஐ.ரீ.அஸ்மியினால் சமர்ப்பிக்கப்பட்டது. இவ்வரவு செலவுத் திட்டமானது கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட அனைத்து பிரதேச மக்களதும் தேவைகளை முன்னுரிமைப்படுத்தியதான, விஷேட வேலைத்திட்டங்கள் அடங்கி வரவு செலவுத்திட்டம் என்பதை ஏற்றுக் கொண்டு, பிரதேச சபையின்…

Read More

உயிருக்கு தீங்கு ஏற்பட்டால் ஜனாதிபதியே பொறுப்பு; மூன்று மணி நேர வாக்கு மூலத்தின் பின்னர் ரிஷாட் தெரிவிப்பு!

தனது கொலைச் சதி முயற்சி தொடர்பில் நாமல் குமாரவின் குரல் வழிப் பதிவு வெளிவந்த பின்னரும் தமக்கிருந்த பாதுகாப்பு வெகுவாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், உயிருக்கு ஆபத்து ஏற்படும் பட்சத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொலிஸ் திணைக்களத்திற்கு பொறுப்பானவரென்ற வகையில் ஜனாதிபதியே அதற்கு வகை சொல்ல வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இன்று (05) காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அழைப்புக்கேற்ப அங்கு சென்ற அவர் சுமார் 3 மணி நேரம் கொலைச்சதி முயற்சி…

Read More

“நீதிமன்றம் நல்லதொரு தீர்ப்பை வழங்கும்” – ரிஷாட் நம்பிக்கை!

நீதிமன்றம் நல்லதொரு தீர்ப்பை வழங்கும் என்ற பூரண நம்பிக்கை தங்களுக்கு உள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பாராளுமன்ற கலைப்பு தொடர்பாக, உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்று வரும் விசாரணைகள் தொடர்பில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் கூறியதாவது, “ஜனாதிபதி தனக்கு இல்லாத அதிகாரத்தை பயன்படுத்தி, பாராளுமன்றத்தை கலைத்த போது, நீதிமன்றமே எம்மை பாராளுமன்ற உறுப்பினர்களாக செயற்பட வைத்து, அங்கே செல்லக்கூடிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தந்தது. நீதித்துறையானது இலங்கையில் சுயாதீனமாகவும், நேர்மையாகவும்…

Read More

“மர்ஹூம் ரஹ்மானின் நல்ல சிந்தனைகளை இறைவன் பொருந்திக்கொள்ள பிரார்த்திக்கிறேன்” -மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன்!

கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினரும் பொலிஸ் அதிகாரியுமான (ஐ.பி) மருதமுனை ரஹ்மானின் திடீர் மறைவு, தன்னை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அன்னாரின் மறைவு குறித்து அவர் தெரிவித்ததாவது, மர்ஹும் ரஹ்மான் பொலிஸ் சேவையில் பணியாற்றிய காலங்கள் அவரின் தொழிற்திறமை, சமூக விசுவாசங்களை மக்களால் புரிந்துகொள்ள முடிந்தது. யுத்த காலத்தில் எதிரிகளின் தாக்குதலிலிருந்து தன்னுடன் பயணித்த பொலிஸ் குழாத்தினரைப் பாதுகாப்பாக மீட்டெடுக்க ரஹ்மான் கையாண்ட யுக்திகளை…

Read More

“தவறுகளை தொடர்ந்தும் செய்யாமல் பெரும்பான்மைக்கு மதிப்பளித்து பிரதமரை நியமியுங்கள்” – அலரி மாளிகை ஊடகவியலாளர் மாநாட்டில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

நாட்டின் முதன் மகனான ஜனாதிபதி, அரசியலமைப்பை தன் கையிலெடுத்துக் கொண்டு மீண்டும் மீண்டும் தவறுகளை செய்து கொண்டிருக்காமல், பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் விரும்புகின்ற, ஏற்றுக்கொள்கின்ற, அவர்களால் வேண்டுகோள் விடுக்கப்படுகின்ற உறுப்பினர் ஒருவரை பிரதமராக நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இன்று (04) பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தற்போதைய அரசியல் நெருக்கடி குறித்து கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது, அரசமைப்பில் இல்லாத அதிகாரத்தை…

Read More

“அரசியலமைப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஓட்டைக்கு துணை போனோல் பேராபத்தைச் சந்திக்க நேரிடும்” – பாணந்துறையில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

நிறைவேற்று அதிகாரத்துக்கு கடிவாளம் இடப்படாத காலத்திலிருந்த ஜனாதிபதிகளான ஜெயவர்தன, பிரேமதாச, சந்திரிக்கா பண்டாரநாயக்கா, டி பி விஜயதுங்க ஆகியோர் அரசியலமைப்புக்கு இயைந்து செயற்பட்ட நிலையில் 19வது திருத்தத்தின் மூலம் சிறகுகள் கத்தரிக்கப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பை கையிலெடுத்துக் கொண்டு தனது சுய விருப்புக்கேற்ப செயற்பட்டு, மீயுயர் சட்டத்தில் ஓட்டையை ஏற்படுத்தியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பாரூக் பஸ்மில்கான் எழுதிய க.பொ.த உயர் தர மாணவர்களுக்கான ”அரசறிவியல் ஓர் அறிமுகம்”…

Read More

”நீதிமன்ற இடைக்கால தடையுத்தரவுக்கு பின்னராவது, ஜனாதிபதி செவிசாய்க்க வேண்டும்” – மக்கள் காங்கிரஸ் தலைவர்  ரிஷாட் பதியுதீன் வலியுறுத்து! 

பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ  மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் செயற்படுவதற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியுள்ள இடைக்கால தடை உத்தரவை கெளரவித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனா உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென   அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிசாத் பதியுதீன் இன்று (12) தெரிவித்தார்.  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக்கு எதிராக ஐக்கிய தேசிய முன்னணியால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான இடைக்கால தடையுத்தரவு வழங்கப்பட்ட பின்னர்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். …

Read More