Headlines

சர் ஜோன் கொத்தலவல மாவத்தை வீதியின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாநகரசபை உறுப்பினரும் குருநாகல் மாவட்ட இளைஞர் அமைப்பாளருமான அஷார்தீன் மொய்னுதீனின் நிதி ஒதுக்கீட்டில், சமூக சேவையாளர் கனீ பாயின் வேண்டுக்கோளுக்கிணங்க, குருநாகல், சர் ஜோன் கொத்தலாவல வீதியின் புனரமைப்புப் பணிகள் நேற்று (17) ஆரம்பித்து வைக்கப்பட்டன. மாநகர சபை உறுப்பினர் அஷார்தீன் இந்தப் பணிகளை இன்று நேரில் சென்று பார்வையிட்டதுடன், புனரமைப்பு வேலைகளை துரிதகதியில் பூர்த்தி செய்து, விரைவில் மக்கள் பாவனைக்காக வீதியை கையளிக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார். (ன)  

Read More

“ஜனநாயக வழிப் போராட்டமே எமக்கு கிடைத்த பாரிய வெற்றி” – அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பி!

நாட்டின் அரசியல் நிலை சீர்குலைவுக்கு எமது ஜனநாயக ரீதியான போராட்டமே எமது வெற்றிக்கு காரணமாக அமைந்தது. நீதித் துறை நீதியை நிலை நாட்டியுள்ளது என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹரூப் தெரிவித்துள்ளார். அண்மைக் காலமாக நாட்டின் அரசியல் குழப்பங்கள் தொடர்பில் அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே (17), அவர்  இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் தற்போதைய ஜனாதிபதியை ஐந்துக்கும் மேற்பட்ட சிறுபான்மை கட்சிகள் 60…

Read More