Headlines

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நவவியின் நிதிஒதுக்கீட்டில் அபிவிருத்திப் பணிகள்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம் நவவியின் DCB நிதி ஒதுக்கீட்டில், மக்கள் காங்கிரஸின் புத்தளம் கிழக்கு கிளை மற்றும் புத்தளம் இளைஞர் அமைப்பாளர் இப்ளால் அமீன் வேண்டியதற்கமைய *180,000 ரூபா செலவில் புத்தளம் சவீவபுரம் உள்ளக ஒழுங்கைகளை ABC கற்களால் செப்பனிடலும், *250, 000 ரூபா செலவில் செய்னப் பாடசாலைக்கான சுற்று மதில் நிர்மானமும் (பகுதி நிதி பாடசாலை அபிவிருத்தி சபையும் அயலோரும்), *80,000 ரூபா பெறுமதியில் புத்தளம் கிழக்கு சி.த.மு…

Read More

“அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எவரிடமும் சரணாகதி அடையவில்லை” – மஹ்ரூப் எம்.பி திட்டவட்டம்!

அரசியலமைப்புச் சட்டத்தை பிழையான வழியில் கையிலெடுத்து, நிறைவேற்று அதிகாரம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொண்டிருப்பதனாலேயே ஜனநாயகத்தை நிலைநாட்ட விரும்பும் கட்சிகளுடன் குறிப்பாக சிறுபான்மைக் கட்சிகளுடன் இணைந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போராடி வருவதாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பி தெரிவித்தார். ஜனநாயகத்துக்காக குரல் கொடுத்துவரும் சிறுபான்மை தமிழ், முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்து நீதிக்காகவும் நியாயத்துக்காகவும் நாம் போராடி வருவதை திரிபுபடுத்தி, எமது கட்சி தமது கொள்கைகளை தூக்கி எறிந்துவிட்டு, ஏனைய கட்சிகளுடன் இரண்டறக் கலந்து…

Read More

சமகால அரசியல் நிலவரம் குறித்து மக்களுக்கு விழிப்பூட்டும் நிகழ்வு!

இலங்கை அரசியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்பூட்டும் நிகழ்வு இன்று (17) மீராவோடை அமீர் அலி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கல்குடா கிளையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில், முன்னாள் பிரதியமைச்சரும் மக்கள் காங்கிரஸின் தவிசாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்துகொண்டு மக்கள் மத்தியில் விளக்கமளித்தார். மேலும், திடீர் அரசியல் மாற்றம் நிகழ்ந்த நாள்முதல், இன்றுவரை நாட்டில் அரசியல் முன்னெடுப்புக்கள் எவ்வாறு செல்கின்றது,…

Read More

மக்களின் ஆணைக்கும் பெரும்பான்மை எம்.பிக்களின் விருப்பத்துக்கும் செவிசாய்க்குமாறு மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட், ஜனாதிபதியிடம் கோரிக்கை!

நாட்டு மக்களின் ஆணைக்கு மதிப்பளித்தும், பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 122 அதிகபட்ச எம்.பிக்களின் வேண்டுகோளுக்கும் செவிசாய்த்து ஜனாதிபதி செயற்பட வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தார். பாராளுமன்றத்தில் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற செய்தியாளர் மாநாட்டில் (14) கருத்து தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, கடந்த இரண்டு வாரங்களாக இந்த நாட்டில் ஏற்பட்டிருந்த அரசியல் கொந்தளிப்புக்கள், குளறுபடிகள் நீங்கி, மீண்டும் இந்த நாட்டில் அமைதியானதும், சமாதானதுமான சூழல் ஏற்படுவதற்கு ஜனாதிபதி வழிவகுக்க…

Read More

“ஜனநாயகத்தை நிலைநாட்டும் தீர்ப்பாக அமைய வேண்டுமென பிரார்த்தியுங்கள்” மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள்!!!

ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டு, நீதியும் நியாயமும் நிலைநாட்டப்பட விரும்பும் ஒவ்வொரு இலங்கைப் பிரஜைக்கும், இன்றைய (13) உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சாதகமானதாக அமைய வேண்டுமென அனைவரும் இறைவனை பிரார்த்திக்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த நாட்டின் ஜனாதிபதி, தனக்கு இல்லாத அதிகாரங்களை எல்லாம் எழுந்தமானமாக கையில் எடுத்துக்கொண்டு, மனம்போன போக்கிலே செயலாற்றி வருவதை எதிர்த்து, அந்த நடவடிக்கைகளுக்கு நியாயம் கோரியே ஜனநாயகத்தை நிலைநாட்ட விரும்பும் ஏனைய கட்சிகளைப் போன்று, அகில…

Read More

பாராளுமன்ற கலைப்பை எதிர்த்து மக்கள் காங்கிரஸ் வழக்கு தாக்கல் செய்தது!

அரசியலமைப்பை மீறி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாராளுமன்றத்தை கலைத்தமைக்கு எதிராக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இன்று (12) உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்குத் தாக்கல் செய்துள்ளது. சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீபினால் தாக்கல் செய்யப்பட் இந்த மனு மீதான விசாரணை, இன்றே எடுத்துக்கொள்ளப்படுகின்றது. இந்த வழக்கில் சிரேஷ்ட சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோ மக்கள் காங்கிரஸ் சார்பில் ஆஜராகியுள்ளார்.   -ஊடகப்பிரிவு-

Read More

பாராளுமன்ற திடீர் கலைப்புக்கு எதிராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வழக்கு தாக்கல் செய்ய முடிவு!!!

நாட்டின் அரசியலமைப்பை மீறி, பாராளுமன்றத்தை உரிய காலத்துக்கு முன்னதாக ஜனாதிபதி கலைத்துள்ளமைக்கு எதிராக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது. கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவரும் புனித மக்காவிலிருந்து நாடு திரும்பியவுடன், இந்த வழக்குத் தாக்கல் செய்யப்படுமெனவும், கட்சியின் பாராளுமன்றக்குழு புனித மக்காவில் கூடி, இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டிருப்பதாகவும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். “அரசியலமைப்பை தமக்கேற்றாற் போன்று ஜனாதிபதி கையிலெடுத்து, சட்டத்துக்கு முரணான முறையில்,…

Read More

சம்மாந்துறை பிரதேச சபையின் தேசிய வாசிப்பு மாதத்தின் பரிசளிப்பு விழா!

சம்மாந்துறை பிரதேச சபைகுட்பட்ட நூலகங்கள் இணைந்து ஏற்பாடு செய்த, இனங்களுக்கிடையில் புரிந்துணர்வினை ஏற்படுத்துவதற்கான “வாசிப்பு” எனும் தொனிப்பொருளில், தேசிய வாசிப்பு மாதத்தின் பரிசளிப்பு விழாவும் கலை கலாச்சார நிகழ்வும் அண்மையில் சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் நடைபெற்றது. சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாட் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அம்பாரை மாவட்ட பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஏ.ரீ.எம்.றாபி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ், இனங்களுக்கிடையில் புரிந்துணர்வினை ஏற்படுத்துவதற்கான…

Read More

நிந்தவூர் தமிழ்ச் சகோதரர்களின் மயான பூமியின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில்,  நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிரினால் முன்னெடுக்கப்படும்,  நிந்தவூரின் பன்முகப்படுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டத்திற்கு அமைவாக,  20 இலட்சம் ரூபா செலவில், தமிழ் சகோதரர்களின் மயான பூமியின் சுற்றுமதில்  அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு மற்றும் நீர், மின் இணைப்பு போன்ற வசதிகளைப் பெற்றுக்கொடுக்கும் ஆரம்ப நிகழ்வு  அண்மையில் (01) குறித்த மயான பூமியில் இடம்பெற்றது. தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நிந்வூரின் தமிழ் பகுதி…

Read More

திவுரும்பொல மனாருல் ஹூதா அரபுக் கல்லூரியின் அபிவிருத்திப் பணிகளுக்கான காசோலை வழங்கி வைப்பு!

பிங்கிரிய தேர்தல் தொகுதி அமைப்பாளர் அப்துல்லாஹ்வின் வேண்டுகோளுக்கிணங்க, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் குருநாகல், திவுரும்பொல, மனாருல் ஹூதா அரபுக் கல்லூரியின் வரவேற்பு மண்டப வேலைகள் நடைபெற்று வருகின்றன. கட்டிட வேலைகளுக்கான காசோலையை முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், மக்கள் காங்கிரஸ் குருநாகல் மாவட்ட அமைப்பாளருமான என்.எம்.நஸீர் அண்மையில் வழங்கிவைத்தார். குருநாகல் மாவட்ட மக்கள் காங்கிரஸ் கட்சிக் காரியாலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மனாருல் ஹூதா அரபுக் கல்லூரியின் அதிபர்…

Read More