Headlines

பாராளுமன்றிலேயே பிரச்சினைக்கு முடிவு காண நடவடிக்கை எடுங்கள்; காலத்தை இழுத்தடிப்பதில் அர்த்தமில்லையென ஜனாதிபதியிடம் ரிஷாட் வலியுறுத்து!!

அரசியலமைப்புச் சட்டத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்கும் நோக்கிலேயே தொடர்ந்தும் போராடி வருகின்றோமெனவும், இந்த இழுபறியை பாராளுமன்றத்தில் உரிய முறையில் தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கையை அவசரமாக ஜனாதிபதி மேற்கொள்ள வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று (27) இடம்பெற்ற ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, பாராளுமன்றத்தில் சபாநாயகர் செயற்படும் முறை, அவரது தைரியம் துணிவு மற்றும் பாராளுமன்ற நடைமுறைகளையும் சம்பிரதாயங்களையும் பாதுகாக்கும் பாங்கு ஆகியவை…

Read More

கண்டி, ஹிஜிராகமை மையவாடி பாதை செப்பனிடல் பணிகள் ஆரம்பம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின்  நிதி ஒதிக்கீட்டில், கண்டி மாவட்ட இணைப்பாளர் ரியாஸ் இஸ்ஸதீனின் வேண்டுகோளுக்கு அமைய, உடபலாத பிரதேச சபை வேட்பாளர் முகம்மட் ரமலானின் கோரிக்கைக்கு இணங்க, கண்டி, தெல்பிடிய ஹிஜிராகமை மையவாடிக்கு செல்லும் பாதையை செப்பனிட்டு கொண்ங்கிரீட் செய்யும் பணிகள்  நேற்று (26) ஆரம்பித்து வைக்கப்பட்டது. மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஹம்ஜாட் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், உடபலாத பிரதேச சபை…

Read More

தையல் இயந்திரங்கள் வழங்கி வைப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், வவுனியா ஆண்டியாபுளியங்குளத்தில் (வாழவைத்த குளம், ஆண்டியாபுளியங்குளம், புதுக்குளம்) ஆகிய கிராமங்களைச் சேர்ந்த தையல் பயற்சியை நிறைவு செய்த யுவதிகளுக்கான தையல் இயந்திரங்கள், அமைப்பாளர் தாவூத் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.  

Read More

பேசாலை வீதி அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின்  7,100,000.00 ரூபாய் நிதியொதுக்கீட்டில்  பேசாலை வீதிக்கு காபட் இடும் பணிகள், மன்னார் பிரதேச சபைத் தவிசாளர்  எஸ்.எச்.எம்.முஜாஹிரினால் நேற்று (26) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பேசாலை பிரதேச சபை உறுப்பினர் டிப்னா குரூஸ், பிரதேச சபை உறுப்பினர் சிலுவை பீரிஸ் ஐயா, வெற்றிமாதா பங்குதந்தை அவர்களும்,மன்னார் பொலிஸ் அதிகாரி (OIC),  பிரதேச சபை உறுப்பினர் றாசிக், இணைப்பளர் முசம்மில் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

Read More