Headlines

கொதடுவை அஹதியா பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா!

வெல்லம்பிட்டிய, கொதடுவை தாருல் நாபீஹா அஹதியா பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று மாலை (21) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளரும், மேல்மாகாண சபை உறுப்பினருமான ஏ.ஜெ.எம்.பாயிஸ் கலந்துகொண்டு உரையாற்றியதுடன், மாணவர்களுக்கு பரிசில்களையும் வழங்கி வைத்தார்.  (ன)

Read More

மினாநகர் பள்ளிவாசல் சுற்றுமதிலுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில், வவுனியா, மினாநகர் பள்ளிவாசலின் சுற்றுமதிலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (21) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் முத்து முஹம்மட், மக்கள் தொடர்பு அதிகாரி மெளலவி தாஹிர், வவுனியா நகர சபை உறுப்பினரும், இணைப்பாளருமான அப்துல் பாரி, மீள்குடியேற்ற செயலணியின் மாவட்ட இணைப்பாளர் சியாம், பிரதேச சபை வேட்பாளர் மன்சூர் உட்பட பலர் பங்கேற்றிருந்தனர்….

Read More

முசலி கோட்ட மட்ட பாடசாலைகளில் தரம் 05 புலமை பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கான கெளரவிப்பு! 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வடமாகாண சபை உறுப்பினர் அலிகான் ஷரீபின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து, முசலி கோட்ட மட்ட பாடசாலைகளில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன. சுமார் 25 பாடசாலைகளைச் சேர்ந்த 50 மாணவர்கள் அன்பளிப்புக்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர். மாணவர்களின் கல்வியில் ஒரு போட்டியை உண்டாக்கும் திட்டமாகவும் எதிர்காலத்தில் மாணவர்களின் கல்வியில் ஒரு மாற்றத்தை உண்டாக்கும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்விற்கு, முன்னாள் வடமாகாண சபை…

Read More

அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியின் “100 நாள் 200 வேலைத் திட்டம்” – மூதூர், கிண்ணியா பிரதேசத்தில் ஆரம்பம்!

59 வது, 60 வது, 61 வது  வேலைத்திட்டங்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், பாராளுமன்ற உறுப்பினரும், திருமலை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியின்,  திருகோணமலை மாவட்ட அபிவிருத்தித் திட்டத்தில், மூதூர் பிரதேச சபை உறுப்பினர் அகீதா நசார், வட்டார அமைப்பாளர்கள் சியான் PHI, சபீக் ஆசிரியர்,  கிண்ணியா நகர சபையின் மாஞ்சோலை வட்டார அமைப்பாளர் தாரிக் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க, மூதூர் மற்றும் கிண்ணியா பிரதேசங்களில் அபிவிருத்தித் திட்டங்கள்,…

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எதிர்வரும் தேர்தலில் மாகாண சபையை தீர்மானிக்கும்! அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பி!

எதிர்வரும் தேர்தலில் மாகாண சபையை தீர்மானிக்கின்றவர்களாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இருக்கப் போகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஃரூப் குறிப்பிட்டுள்ளார். திருகோணமலை – கிண்ணியா, அஹமட் லேன் உள் ஒழுங்கையில் 45 இலட்சம் ரூபா செலவில் கொங்கீரிட் வீதி, வடிகான் அமைப்புக்கான வேலைத் திட்டத்துக்காக அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றுள்ளது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் பிரதேசமான வெருகல் பிரதேசத்தில் இலங்கை துறை,…

Read More

தொழில் முயற்சியாண்மையை ஒழுங்குபடுத்துவதற்கான “மதிப்பீட்டு ஆய்வு” அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் இன்று கையளிப்பு!  

சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாண்மையுடன் தொடர்புடைய நிறுவனங்களின் செயற்பாடுகளை சீராக ஒழுங்குபடுத்தும் பல்வேறு திட்டங்களை, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையில், குறித்த நிறுவனங்களுக்கான முறையான சட்டவரைபை உருவாக்கி, சூழலுக்கு ஏற்ற செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும், அவற்றின் நிர்வாகங்களை ஒழுங்குபடுத்துவதற்கும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு பிரதான நடவடிக்கையை எடுத்துள்ளது. நிறுவனங்களின் சட்டவரைபு  உட்பட ஏனைய செயற்பாடுகளை ஒருமிக்கச் செய்யும் வகையில், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் வேண்டுகோளுக்கிணங்க, ஏர்னஸ்ட் அன்ட் யோங் நிறுவனம் (Earnest…

Read More

பதவிக்கு அப்பால் சேவை செய்யும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!!!

முஸ்லிம்களின் பாரம்பரிய  தொழில் “வர்த்தகம்” என்பதால் அந்த மக்களின் தொழிலை முன்னேற்றம் செய்ய, வர்த்தக அமைச்சை எந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏற்றுக்கொள்ளாத போது, இந்த நாட்டின் வர்த்தகர்கள் முன்னேற்றம் அடைய  வேண்டும், நாடு வர்த்தகம் மூலம் பொருளாதார அபிவிருத்தியடைய வேண்டும் என்ற கொள்கையுடன், பலரின் வேண்டுகோளுக்கிணங்க கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சுப் பதவியை, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஏற்றுக்கொண்டார். அதனால், வர்த்தகர்கள் இன்று பெரும் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர் அமைச்சர் ரிஷாட் தொடர்ந்து வர்த்தக அமைச்சராக இருந்துகொண்டு,…

Read More

பாவனையாளர் அதிகாரசபையின், விசாரணை அதிகாரிகளுக்கான இரண்டு நாள் வதிவிடப் பயிற்சி பட்டறை!

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான, பாவனையாளர் அதிகாரசபையின், விசாரணை அதிகாரிகளுக்கான இரண்டு நாள் வதிவிடப் பயிற்சி பட்டறையின் ஆரம்ப நிகழ்வு, நேற்று (21) துல்ஹிரிய, மாஸ் அதெனா நிலையத்தில் இடம்பெற்ற போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டார். நாடளாவிய ரீதியில் 300 இற்கும் அதிகமான விசாரணை அதிகாரிகள் இவ்வதிவிட பயிற்சிப் பட்டறையில் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில், பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி அனுர பண்டார மெத்தேகொட,…

Read More

அடம்பன் பள்ளிவாயல் சுற்றுமதிலுக்கான அடிக்கல் நாட்டுவிழா நிகழ்வு!

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில், மன்னார், மாந்தை மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட அடம்பன் பிரதேசத்தில் பள்ளிவாசல் சுற்றுமதிலுக்கான அடிக்கல் நாட்டுவிழா நிகழ்வு இடம்பெற்றது. இரண்டு மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நேற்று (21) ஆரம்பிக்கப்பட்ட அடிக்கல் நாட்டு விழா நிகழ்விற்கு, பிரதம அதிதியாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பிரத்தியேகச் செயலாளரும், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான றிப்கான் பதியுதீன்…

Read More

அல்/ஹிதாயா வித்தியாலயத்தில் நிறைவுற்ற அபிவிருத்திப் பணிகள் மாணவர்கள் பாவனைக்கு கையளிப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளரும், மேல்மாகாண சபை உறுப்பினருமான பாயிஸ் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து, கொழும்பு, அல்/ஹிதாயா வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நுழைவாயில் மற்றும் பெயர் பலகை ஆகியவற்றை மாணவர்களின் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வு வெள்ளிகிழமை (19) இடம்பெற்றது. இந்நிகழ்வில், மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் மற்றும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். -ஊடகப்பிரிவு-    

Read More