Headlines

குவைத் –  இலங்கை வர்த்தக சம்மேளனங்களுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை கைச்சாத்திட இணக்கம்: இலங்கை வர்த்தக திணைக்களம் தெரிவிப்பு!

குவைத் –  இலங்கை கூட்டு அமைச்சர்கள் குழுவின் இரண்டாவது அமர்வு, மிகவும் சாதகமான முடிவுடன் நிறைவடைந்தாக, இலங்கை வர்த்தக திணைக்களம் நேற்று தெரிவித்தது.  இரு நாடுகளுக்கிடையிலான தனியார் துறை மீது பாரிய பங்களிப்பினை ஏற்படுத்துவதற்கு ஆலோசனை தெரிவிக்கப்பட்ட நிலையில், முன்னோடியான வர்த்தக சம்மேளனங்களுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை கைச்சாத்திட இணக்கம் தெரிவிக்கப்பட்டதாகவும் வர்த்தக திணைக்களம்  மேலும் தெரிவித்தது.  2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் 9-11 ஆம் திகதிகளில் குவைத்தில் நடைபெற்ற வர்த்தக மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான, குவைத் –…

Read More

பிள்ளைகளின் எதிர்காலத்தை பாடசாலைகளின் கைகளில் மட்டும் ஒப்படைத்துவிடாது, பெற்றோர்களும் அதிகம் அக்கறைகொள்ள வேண்டும்” தவிசாளர் தாஹிர்!

பெற்றோர்களான நாம் ஒவ்வொருவரும் நமது பிள்ளைகளான அடுத்த அடுத்த தலைமுறைகளின் சிறப்பான எதிர்காலம் குறித்து, அவர்கள் கருவுற்றதிலிருந்து அல்லது அதற்கு முன்னரே அக்கறை கொண்டு திட்டமிட்டு செயற்பட வேண்டும் என நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் தெரிவித்தார். இணைந்த வடகிழக்கின் முன்னாள் கல்விப் பணிப்பாளரும் கல்லூரியின் அதிபருமான ஐ.எம்.இஸ்சதீன் அவர்களின் தலைமையில், நிந்தவூர் சீ.ஓ.லெஸ்தகீர் சர்வதேச கல்லூரி நேற்று (12) நடாத்திய சர்வதேச சிறுவர் தின விளையாட்டு மற்றும் பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு…

Read More

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில்  யுவதிகளுக்கான தையல் பயிற்சி நிலையங்கள் திறந்து வைப்பு!

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில் யுவதிகளுக்கான தையல் பயிற்சி நிலையங்கள், மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிரின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. குடும்பங்களின் வருமானங்களை உயர்த்தவும்,  தலைமைத்துவ பண்புடைய வருமானம் பெறக்கூடிய பெண் சமூகத்தை உருவாக்குவதாற்காகவும் ஆரம்பிக்கப்பட்ட இந்த தையல் பயிற்சி வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மன்னார் பிரதேச சபைக்குட்பட்ட தாழ்வுபாடு, தாராபுரம், தோட்டவெளி, புதுக்குடியிருப்பு, கரிசல், காட்டாஸ்பத்திரி, பேசாலை, தலைமன்னார் போன்ற பிரதேசங்களில் இந்த தையல்…

Read More

பம்மன்னயில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பும் அபிவிருத்தி பற்றிய கலந்துரையாடலும்!

குருநாகல் மாவட்டத்தின் கடுகம்பல தேர்தல் தொகுதி பம்மன்ன அகார கொலனி மக்கள் சந்திப்பும் கட்சியின் அபிவிருத்தி பற்றிய கலந்துரையாடலும் மாகாண சபை முன்னாள் உறுப்பினரும், குருநாகல் மாவட்ட அமைப்பாளருமான நஸீர் தலைமையில், பம்மன்ன அகார பள்ளி மக்தப் கட்டிடத்தில் அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்வின் போது, வட்டாரக் கிளை அமைக்கப்பட்டதுடன், கிராமத்தின் எதிர்கால அபிவிருத்திகள் தொடர்பாகவும் ஊர் மக்களிடம் கலந்தாலோசிக்கப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் பம்மன கிளை சங்கத் தலைவர் நஸ்மிரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில்,…

Read More

அமைச்சர் ரிஷாட் பதியுதீனினால்  இறக்காமம் பிரதேச அபிவிருத்திக்கு 05 மில்லியன் ரூபா நிதி ஒதிக்கீடு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் முயற்சியில், இறக்காமம் பிரதேச சபை உப தவிசாளரும், இறக்காமம் மத்திய குழு தலைவருமான ஏ.எல்.நெளபரின் வேண்டுகோளுக்கிணங்க 05 மில்லியன் ரூபா நிதி இறக்காமம் பிரதேச அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியின் ஊடாக இறக்காமம் பிரதேசத்தில் புணரமைக்கப்பட வேண்டிய வீதிகள் உள்ளிட்ட இன்னோரன்ன அபிவிருத்திப் பணிகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

மக்கள் காங்கிரஸ் இறக்காமம் மக்கள் பணிமனை திறப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இறக்காமம் பிரதேச மக்கள் பணிமனை மக்களுக்காக சேவை செய்ய ஆரம்பித்துள்ளது. இதுவரை காலமும் இறக்காமம் பிரதேச மக்கள் தங்களது சேவையை பெற்றுக்கொள்ள சிரமப்பட்டனர். தற்பொழுது இந்தப் பிரச்சினையை நிவர்த்தி செய்யும் முகமாக அ.இ.ம.கா இறக்காமம் பிரதேச சபை உப தவிசாளரும்,இறக்காமம் மத்திய குழு தலைவருமான A.L.நெளபர் மெளலவி மக்கள் பணிமனையை திறந்து வைத்துள்ளார். மக்கள் தங்கள் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ளவும், சேவைகளை பெற்றுக்கொள்ளவும் சனி, ஞாயிறு தினங்களில் காலை முதல்…

Read More