Headlines

பிரதேச சபை உறுப்பினர் ஹஸீப் மக்கோனை பாடசாலைக்கு விஜயம்!

மக்கோனை ஸ்ரீ ஸம்புத்தராஜா வித்தியாலய அதிபரது வேண்டுகோளை ஏற்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பேருவளை பிரதேச சபை உறுப்பினர் ஹஸீப் மரிக்கார் இன்று (04) பாடசாலைக்கு விஜயம் மேற்கொண்டார். இப்பாடசாலையானது 30% சிங்கள மாணவர்களையும் 70% முஸ்லிம் மாணவர்களையும் கொண்டியங்கக் கூடிய இந்தப் பாடசாலையில், நிலவும் குறைபாடுகள் மற்றும் தேவைகள் பற்றி அதிபரால் ஹஸீப் மரிக்காரிடம் முன்வைக்கப்பட்டது. இவற்றைக் கேட்டறிந்துகொண்ட பிரதேச சபை உறுப்பினர் ஹஸீப், இது தொடர்பில் கலந்தாலோசித்து விரைவில் தீர்வைப் பெற்றுத் தருவதாகவும், பாடசாலையின்…

Read More

புதுகுடியிருப்பு முஸ்லிம் பாடசாலையில் புதிய வகுப்பறைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில், மன்னார் பிரதேச சபைக்குட்பட்ட புதுகுடியிருப்பு வட்டாரத்தின், மன்/புதுகுடியிருப்பு முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் புதிய இரண்டு மாடி வகுப்பறைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (04) இடம்பெற்றது. அத்துடன், கடந்த ஆண்டு அமைச்சர் ரிஷாட் பதியுதீனினால் இப்பாடசாலைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பாடசாலை நுழைவாயில் மற்றும் தொலைத்தொடர்பு கோபுரமும் இன்று அதிதிகளால் திறந்துவைக்கப்பட்டது. இந்த நிகழ்வில்,  மன்னார் பிரதேச…

Read More

அழகுபடுத்தப்பட்ட தலைமன்னார் கடற்கரை பூங்கா மக்கள் பாவனைக்காக திறந்து வைப்பு!

இலங்கை சுற்றுலாத்துறை அதிகார சபை மற்றும் மன்னார் பிரதேச சபை ஆகியவற்றின் நிதி ஒதுக்கீட்டில் அழகுபடுத்தப்பட்ட தலைமன்னார் கடற்கரை பூங்கா நேற்று (03) மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வு, சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் இம்மானுவேல் அமரதுங்க, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், முசலி பிரதேச சபை தவிசாளர் சுபியான், மாந்தை மேற்கு பிரதேச சபை தவிசாளர் செல்லத்தம்பு மற்றும் பாராளுமன்ற…

Read More

“தொழில் முனைவோருக்கான சர்வதேச மாநாடு 09ஆம் திகதி திருமலையில் ஆரம்பம்” அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அறிவிப்பு!

ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் முன்னணி சர்வதேச தொழில் முனைவோருக்கான கல்வித்தொடர் மாநாடு, இம்முறை முதல்தடவையாக இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில், ஒக்டோபர் 09 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். திருமலையில் 9,10,11 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள இந்த மாநாட்டின் இறுதி அமர்வு கொழும்பு, ஷங்கிரிலா ஹோட்டலில் நிறைவுறும் என அவர் தெரிவித்தார். யுனெஸ்கோ – எபீட் (UNESCO-APEID) நிறுவனமும், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான தேசிய கைத்தொழில் அபிவிருத்தி…

Read More

போகஸ்வெவ கிராம மக்களுடனான கலந்துரையாடல்!

கெபித்திகொல்லேவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட போகஸ்வெவ கிராம மக்களின் நீர், காணி, வீடு சம்பந்தமான பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்கும் நோக்கில், அப்பிரதேச மக்களுக்கும் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானுக்குமிடையில் கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது. இந் நிகழ்வில் மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர் ARM.தாரிக், வீட்டுத்திட்ட அமைச்சின் அனுராதபுர மாவட்ட உயர் அதிகாரி (பொறியியலாளர்) என்போர் கலந்துகொண்டிருந்தனர்

Read More