Headlines

விசினவ கிராமத்தின் குளங்களில் நன்னீர் மீன் வளர்ப்பு தொடர்பான கலந்துரையாடல்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான அமீர் அலியின் நிதியொதிக்கீட்டில், நன்னீர் மீன் வளர்பை மேம்படுத்தும் நோக்கில், மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான என்.எம்.நஸீரின் ஆலோசனையில், குளியாப்பிட்டிய விசினவ பகுதியில் உள்ள 07 குளங்களுக்கு மீன் இட்டு வளர்ப்பது சம்பந்தமான ஆலோசனைகள் மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு கடந்த சனிக்கிழமை (27) மடலஸ்ஸயில் நடைபெற்றது. குளியாப்பிட்டிய பிரதேச சபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதித் தவிசாளர் எம்.சி.இர்பான் தலைமையில்…

Read More

முக்கிய கட்சிகளின் உறுப்பினர்கள் மக்கள் காங்கிரஸில் இணைவு!

குருநாகல் மாவட்டத்தின் கடுகம்பொல தேர்தல் தொகுதியின் எலபடகம பிரதேசத்தின் ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளின் முக்கிய உறுப்பினர்கள் இன்று (03), மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான நஸீர் முன்னிலையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டனர். ஐக்கிய தேசிய கட்சியின் பம்மன்ன கிளைச் சங்க தலைவர் நஸ்மிர் மற்றும் எலபடகம ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய உறுப்பினர் சிராஸ்…

Read More

மக்கள் காங்கிரஸ் கல்குடா இளைஞரணியின் விளையாட்டு விழா இறுதி நிகழ்வு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கல்குடா இளைஞர் அணியினர் நடாத்திய விளையாட்டு விழாவின் இறுதிப்போட்டிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (30.09.2018) இரவு ஓட்டமாவடி அமீர் அலி மைதானத்தில் இடம்பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கல்குடா இளைஞர் அமைப்பால், பிரதேச இளைஞர்களின் விளையாட்டு துறையை அபிவிருத்தி செய்யவும், போதையற்ற இளைஞர் சமூகத்தை உருவாக்கும் நோக்கிலும் கோறளைப்பற்று மத்தி மற்றும் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் பல்வேறு வேலைத்திட்டங்களை நடாத்தி வருகின்றது. அதன் அடிப்படையிலேயே கழகங்களுக்கிடையில் உதைப்பந்தாட்ட…

Read More

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் வாழைச்சேனை பிரதேசத்தில் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை பிரதேசத்திற்குட்பட்ட சில இடங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் பல அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. கடந்த ஞாயிற்றுக்கிழமை (30-09-2018) கல்குடா தேர்தல் தொகுதிக்குட்பட்ட வாழைச்சேனை பிரதேசத்திற்கு விஜயம் செய்த அமைச்சர், அம்மக்களின் நன்மை கருதி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினுடைய மக்கள் பணிமனை கிளைக் காரியாலயத்தை வாழைச்சேனையில் திறந்து வைத்ததுடன், அப்பகுதியில் நீண்ட காலமாக நிலவி வந்த குறைபாடுகளுக்கு…

Read More