Headlines

மின்சார இணைப்புக்கான பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு!

கொழும்பு பிரதேசத்தில் பாடசாலை செல்லும் சிறுவர்கள் உள்ள வறிய குடும்பங்களின் வீடுகளுக்கு மின்சார இணைப்பை பெற்றுக் கொடுக்கும் நிகழ்வு இன்று (29) இடம்பெற்றது.  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளரும். மேல் மாகாண சபை உறுப்பினருமான ஏ.ஜெ.எம்.பாயிஸ்  அவர்களின் தலைமையில், கொழும்பு பிரதான கட்சிக்  காரியாலயத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு, மின்சார இணைப்புக்கான பத்திரங்களைப் பெற்றுக்கொண்டனர். இதன்போது, மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட முக்கியஸ்தர்கள் உட்பட…

Read More

வாழைச்சேனைப் பிரதேச சபையின் குப்பைப் பிரச்சினைக்கு தீர்வு: அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் தீர்மானம்!

கோறளைப்பற்று பிரதேச சபை பிரிவிற்குள் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு நிரந்தர இடமில்லாத பிரச்சினைக்கு, மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் தீர்வினைப் பெற்றுத்தருவற்கு நடவடிக்கையெடுப்பதாக, கோறளைப்பற்று, வாழைச்சேனை பிரதேச செயலக அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கோறளைப்பற்று பிரதேச செயலக அபிவிருத்திக்குழுக் கூட்டம் நேற்று மாலை (28) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில், இணைத்தலைவர்களான பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.யோகேஸ்வரன் மற்றும் வாகரை பிரதேச சபையின் பிரதித்தவிசாளர் சந்திரபால ஆகியோரது தலைமையில் இடம்பெற்ற போதே, மேற்படி தீர்மானம்…

Read More

மக்கள் காங்கிரஸின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான கருத்தரங்கு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், சிறந்த நகரம் மற்றும் பிரதேசங்களை உருவாக்கும் நோக்கில், மக்கள் காங்கிரஸின் வடக்கு – கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான கருத்தரங்கு, மட்டக்களப்பு, சத்துருக்கொண்டான், சர்வோதய நிலையத்தில் இன்று (29) இடம்பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் எஸ்.சுபைர்தீன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், கட்சியின் தவிசாளரும் பிரதி அமைச்சருமான அமீர் அலி, கட்சியின் தேசிய அமைப்பாளரும், திருமலை மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினருமான…

Read More

உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதி நிகழ்வில் அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பி பங்கேற்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கிண்ணியா நகர சபை  உறுப்பினர் நிசார்டீன் முகமட் ஏற்பாட்டில், “Nisardeen Trophy – 2018” வெற்றிக்கிண்ணத்துக்கான உதைப் பந்தாட்டச் சுற்றுப் போட்டியின், இறுதிப் போட்டி பெரியாற்று முனை, ரேன்ஞர்ஸ் மைதானத்தில் நேற்று (28) வெகுவிமர்சையாக நடை பெற்றது. திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு போட்டியை ஆரம்பித்து வைத்ததுடன், வெற்றியாளர்களுக்கு கிண்ணங்களையும் பரிசில்களையும் வழங்கி வைத்தார். இதன்போது அப்பிரதேசத்தின் மூத்த வீரர்கள் கௌரவிக்கப்பட்டமை அங்கு பிரதான…

Read More

அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியின் “100 நாள் 200 வேலைத் திட்டம்”

புடவைக்கட்டு, குச்சவெளி, இறக்ககண்டி, நிலாவெளி, இக்பால் நகர் பிரதேசங்களில் 06 வேலைத்திட்டங்கள் ஆரம்பம். 29 வது, 30 வது, 31 வது, 32 வது, 33 வது, 34 வது வேலைத்திட்டங்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், பாராளுமன்ற உறுப்பினரும், திருமலை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியின்  திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி திட்டத்தில் குச்சவெளி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஜனா வட்டாரக்குழு தலைவர்களான நாஸிர்,…

Read More

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில் பேருவளையில் இடம்பெற்ற சுயதொழில் ஊக்குவிப்பு அறிவூட்டல் கருத்தரங்கு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான கைத்தொழில் அபிவிருத்தி சபை (IDB) மற்றும் தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை (NEDA) ஆகியன இணைந்து நடாத்திய, தொழில் முயற்சியாளர்களுக்கான சுயதொழில் ஊக்குவிப்பு அறிவூட்டல் கருத்தரங்கு, களுத்துறை மாவட்டத்தில் 02 ஆம் கட்டமாக பேருவளை, தர்கா நகர் நாதா கார்டனில் இன்று (29) நடைபெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பேருவளை பிரதேச சபை உறுப்பினர்…

Read More

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில் களுத்துறையில் சுயதொழில் ஊக்குவிப்பு அறிவூட்டல் கருத்தரங்கு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான கைத்தொழில் அபிவிருத்தி சபை (IDB) மற்றும் தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை (NEDA) ஆகியன இணைந்து நடாத்திய, தொழில் முயற்சியாளர்களுக்கான சுயதொழில் ஊக்குவிப்பு அறிவூட்டல் கருத்தரங்கு, களுத்துறை மத்திய கல்லூரியில் இன்று (29) இடம்பெற்றது. களுத்துறை நகரசபை உறுப்பினரும், மக்கள் காங்கிரஸின் களுத்துறை அமைப்பாளருமான ஹிஸாம் சுஹைலின் தலைமையில், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பொதுசன தொடர்பு அதிகாரி…

Read More