Headlines

அமைச்சர் ரிஷாட்டின் நிதி ஒதுக்கீட்டில் P.P பொற்கேணி அ.மு.க.பாடசாலைக் கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா! 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில் மன்/பி.பி.பொற்கேணி அ.மு.க பாடசாலையில் நிர்மாணிக்கப்படவுள்ள இரண்டு மாடிக் கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டுவிழா நிகழ்வு, அதிபர் எம்.எச்.ஹஸ்பி தலைமையில் இன்று (28) இடம்பெற்றது. கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பிரத்தியேகச் செயலாளரும், மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான ரிப்கான் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இந் நிகழ்வில், மாகாண சபை உறுப்பினர் அலிக்கான் ஷரீப், வலயக்கல்வி பணிப்பாளர், முசலி பிரதேச சபை…

Read More

சுற்றுச்சூழல் பாதிப்புக்கள் குறித்த விழா தொடர்பான கலந்துரையாடல்!

“மன்னார் மாவட்டத்தின் சுற்றுச்சூழல் பாதிப்புக்கள் மற்றும் சவால்கள்” என்ற தொனிப்பொருளில் ஒக்டோபர் 05 ஆம் திகதி இடம்பெறவுள்ள விழா தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், இன்று காலை (28) மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன பிரதம அதிதியாகப் பங்கேற்கும் இந்த விழாவை முன்னிட்டு, மன்னார் அரசாங்க அதிபர் மோகன்ராஜ் தலைமையில் இடம்பெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டார். சுற்றாடல் அதிகார சபை உயரதிகாரிகள்,…

Read More

“இன, மத, கட்சி பேதமற்ற அபிவிருத்திகள் தொடரும்” அப்துல்லா மஹரூப் எம்.பி

இன, மத, கட்சி பேதமற்ற அரசியல் அபிவிருத்தியை திருகோணமலை மாவட்டத்தில் எனது ஆரம்ப காலம் தொட்டு நடை முறைப் படுத்தி வருகிறேன் இன்றும் அதைத்தான் செய்து வருகிறேன். இனக் குரோதமற்ற சமாதான சூழலினை உருவாக்க திருகோணமலை மாவட்ட மூவின மக்களும் உறுதி பூண்டுள்ளார்கள் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹரூப் தெரிவித்தார். பதவிசிறிபுர பகுதியில் ஐந்து வீதிகளுக்கான கொங்ரீட் இடும் பணிகளின் அங்குரார்ப்பண நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் உரையாற்றுகையில்,…

Read More

தேசிய மீலாத் விழாவை முன்னிட்டு முசலிப் பிரதேசத்தில் பாரிய அபிவிருத்தி திட்டங்கள்!

மன்னார், முசலியில் எதிர்வரும் நவம்பர் 20 ஆம் திகதி இடம்பெறவுள்ள தேசிய மீலாத் நபி விழாவை முன்னிட்டு, முசலிப் பிரதேசத்தில் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அந்தவகையில், மன்னார் அரசாங்க அதிபர் மோகன் ராஜ் தலைமையில், மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் கலந்துகொண்டு, அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடியதுடன், விழா ஏற்பாடுகள் குறித்தும் அதிகாரிகளுடன்…

Read More

சிலாவத்துறை தபால் நிலையத்திற்கு விரைவில் புதிய கட்டடம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோளின் பேரில் முசலிக்கு விஜயம் செய்த, தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தற்காலிகக் கட்டிடமொன்றில் இயங்கிவரும் சிலாவத்துறை தபால் நிலையத்தைப் பார்வையிட்டதுடன், விரைவில் நிரந்தரக் கட்டிடமொன்றைக் கட்டித்தருவதாக உறுதியளித்தார். -ஊடகப்பிரிவு-

Read More