Headlines

நெல்லுத்தீவு வாழ் மக்களுடனான கலந்துரையாடல்!

நிந்தவூரின் நெல்லுத்தீவு பிரதேச சமூக, பெளதீக மற்றும் உள்கட்டுமான அபிவிருத்திகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக, நெல்லுத்தீவு வாழ் மக்களுக்கும் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிருக்கும் இடையே கலந்துரையாடலொன்று இன்று(26) நிந்தவூர் பிரதேச சபையில் இடம்பெற்றது. குறித்த பிரதேசத்தில் காணப்படும் பாதை விஸ்தரிப்பு தொடர்பான நடவடிக்கைகளை துரிதகதியில் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு, தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிரினால் ஆலோசனை வழங்கப்பட்டது. இதன்போது நிந்தவூர் பிரதேச சபையின் செயலாளர் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

உடுநுவர அம்பரபொல வீதியின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

கண்டி மாவட்டத்தின் உடுநுவர தேர்தல் தொகுதியில், தவுலகல வட்டாரத்தில் அமைந்துள்ள அம்பரபொல டீன் சைட் தோட்டத்து வீதியை கொங்கிரீட் பாதையாக செப்பனிடும் பணிகள் நேற்று (25) ஆரம்பமானது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஊடாக, உடுநுவர பிரதேச சபை உறுப்பினர் நஸார் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூபா 150,000 மூலமாக இந்த அபிவிருத்தித் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. மேலும், உடுநுவர தேர்தல் தொகுதியில் அமைந்திருக்கும் ரகுபெத்த பாதை செப்பனிடுதல் மற்றும் பாலம் அமைத்தல் தொடர்பான கலந்துரையாடலொன்றும் நேற்று உடுநுவர பிரதேச…

Read More

“இலங்கை – சவூதி உறவுகள் மேலும் வலுவடைய ஆக்கபூர்வமான செயற்பாடுகளை மேற்கொள்வோம்” சவூதி அரேபியாவின் தேசிய தின நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

இலங்கையின் பொருளாதார வளர்ச்சியிலும் மக்களின் நலனோம்பு நடவடிக்கைகளிலும் ஆக்கபூர்வமான உதவிகளை மேற்கொண்டு வரும் சவூதி அரேபியாவுடனான உறவுகள், மேலும் வலுவடைய வேண்டுமென கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரித்தார். சவூதி அரேபியா நாட்டின் 88 வது தேசிய தின நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார். இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அப்துல் நாசர் அல்-ஹர்தி தலைமையில், கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் நேற்று மாலை (25)…

Read More

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை குழு அங்கத்தவராக கே.எம்.நிலாம் நியமனம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக் குழு அங்கத்தவராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் யாழ் மாநகர சபை உறுப்பினர் கே.எம்.நிலாம் நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் வை.எம்.எம்.ஏயின் வேண்டுகோளுக்கிணங்க, சுகாதார போசனை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்னவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனத்தை யாழ்ப்பாணம் அகில இலங்கை  வை.எம்.எம்.ஏயின் அலுவலகத்தில் வைத்து  நேற்றிரவு(25) அதன்  தலைவர் எம்.எஸ் றஹீமினால் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன், குறித்த பேரவையின் உதவி செயலாளரான என்.பவாஸ் என்பவரும் இக்குழு அங்கத்தவராக நியமனம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More