“இயற்கையினால் ஏற்படும் பாதிப்புக்களைக் கூட எனது தலையில் கட்டுகின்றார்கள்” வவுனியாவில் அமைச்சர் ரிஷாட்!
பல்வேறு அபாண்டங்களையும் பழிகளையும் தன்மீது சுமத்தி வருபவர்கள், இப்போது இயற்கையால் ஏற்படுத்தப்படும் பாதிப்புக்களையும் துன்பங்களையும் கூட, தினமும் தனது தலையில் கட்டி வருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா மாவட்ட பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுடனான கலந்துரையாடலொன்று, இன்று மாலை (21) வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற போது, அமைச்சர் கலந்துகொண்டு உரையாற்றினார். இந்த சந்திப்பில் வட மாகாண சபை உறுப்பினர் ஜயதிலக, வவுனியா நகர…
