Headlines

பிரதேச சபை உறுப்பினர் சஹீலின் முன்மாதிரி!

சம்மாந்துறை பிரதேசத்தின் வறிய குடும்பங்களை உள்ளடக்கிய  சது/ஜமாலியா வித்தியாலயத்தின்  நிலவரத்தினை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சம்மாந்துறை பிரதேச சபையின் உறுப்பினர் ஏ.சீ.எம்.சஹீலிடம் பாடசாலை நிருவாகத்தினர் அண்மையில் சுட்டிக்காட்டியிருந்தனர். இதனைத் தொடர்ந்து, குறித்த பாடசாலையில் இம்முறை புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கின்ற 15 மாணவர்களுக்கு, அவர்களது மேலதிக வகுப்பிற்கான வசதிகளை ஏற்படுத்தி, தனது மாதாந்த சம்பளத்தையும் அந்த மாணவர்களது கல்விக்காக தொடர்ந்தும் செலவு செய்வதற்காக பிரதேச சபை உறுப்பினர் சஹீல் முன்வந்துள்ளார். (ன)

Read More

மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் கல்லூரியின் கட்டிடத் திறப்பு விழா!

கொழும்பு, மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் கல்லூரிக்கென நிர்மாணிக்கப்பட்ட 03 மாடிக் கட்டிடத்தின் திறப்பு விழா நேற்று புதன்கிழமை (19) இடம்பெற்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு படாசாலைக் கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றினார்.  இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளரும், மேல் மாகாண சபை உறுப்பினருமான முஹம்மத் பாயிஸ் மற்றும் கொழும்பு மாநகர சபை உறுப்பினர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்….

Read More

யாழில் மீள்குடியேறிய குடும்பங்களுக்கு மலசலகூடம்!

யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறி மிகவும் வறிய நிலையில் வாழ்ந்து வரும் முஸ்லிம் குடும்பங்களுக்கு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சிபாரிசின் பேரில் மலசலக் கூடங்கள் அமைத்துக் கொடுக்கப்பட்டது. சமூக மேம்பாட்டுக்கும், இனத்துவத்துக்குமான அமைப்பின் தலைவர் முஹம்மது ரியாஸ் அவர்களினால் அன்பளிப்புச் செய்யப்பட்டு, பூரணப்படுத்தப்பட்ட மேற்குறித்த மலசலகூடங்கள், யாழ் மாநகர சபை உறுப்பினர் கே.எம்.நியாஸ் நிலாம் மற்றும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களான முஜாஹித் நிஸார், முஹம்மது ரியாஸ் ஆகியோரினால் பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது. (ன)

Read More

சிலாவத்துறை மையவாடியின் சுற்றுமதிலுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில் முசலி பிரதேச சபைக்குட்பட்ட சிலாவத்துறை, கூலாங்குளம், தம்பட்ட முசலிகட்டு மையவாடியின் சுற்றுமதில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (20) இடம்பெற்றது. 15 இலட்சம் ரூபா முதற்கட்ட நிதி ஒதுக்கீட்டில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. முசலி பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் முகுசீன் றயீசுத்தீன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், முசலி பிரதேச சபை தவிசாளர் சுபியான், , மன்னார் பிரதேச…

Read More

முருங்கன் மாவிலங்கேணி அடைக்கல மாதா தேவாலயத்தின் அபிவிருத்திக்கு அமைச்சர் ரிஷாட் நிதி ஒதுக்கீடு!!!

நானாட்டான் பிரதேச சபைக்குட்பட்ட முருங்கன் மாவிலங்கேணி கிராமத்தின் அடைக்கல மாதா தேவாலயத்தின் அபிவிருத்திக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனினால் 01 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில்,தேவாலயத்தின் தரையை புனரமைப்பதற்கான வேலைத்திட்டங்களை வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பிரத்தியேகச் செயலாளருமான ரிப்கான் பதியுதீன் நேற்று (19) ஆரம்பித்து வைத்தார். நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர் கிறிஸ்ட்ரி சந்திரிக்காவின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், நானாட்டான் பிரதேச சபை…

Read More