Headlines

தவிசாளர் முஜாஹிரினால் தெருவிளக்கு பொருத்தும் பணிகள் ஆரம்பம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிரின் மூலம் தலைமன்னார் ஸ்டேஷன் பகுதிக்கு தெருவிளக்குகள் பொருத்தும் பணிகள் நேற்று (12) ஆரம்பித்து வைக்கப்பட்டன. பிரதேச சபை உறுப்பினர் புனிதா அவர்களின் வேண்டுகோளுக்கமைய, தவிசாளர் முஜாஹிரின் முயற்சியில், LED தெருவிளக்குகள் பொருத்தும் பணிகள்  இடம்பெற்றன. இந்த நிகழ்வில் மன்னார் பிரதேச சபை உறுப்பினர் புனிதா மற்றும் கட்சியின் முக்கியஸ்தர் முஸம்மில் உட்பட கிராம மக்களும் கலந்துகொண்டனர். (ஐ)

Read More

மன்னார், கருங்கண்டல் பிரதேசத்தின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்!

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில், மன்னார், மாந்தை மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட, கருங்கண்டல் ரோமன் கத்தோலிக்க தமிழ் மகாவித்தியாலயத்தில் சுற்றுமதில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (13) இடம்பெற்றது. வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பிரத்தியேகச் செயலாளருமான றிப்கான் பதியுதீனின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், மாந்தை பிரதேச சபை தவிசாளர் செல்லத்தம்பு ஐயா, மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிர் மற்றும் பிரதேச சபை…

Read More

அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பி தலைமையில் கிண்ணியா தள வைத்தியசாலை விஸ்தரிப்பு தொடர்பான கலந்துரையாடல்!

கிண்ணியா தள வைத்தியசாலையின் விஸ்தரிப்பு மற்றும் ஜெய்கா (JICA) திட்டத்தினூடாக வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் கிண்ணியா தள வைத்தியசாலையில் அண்மையில் இடம்பெற்றது.  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில், வைத்தியசாலையின் அபிவிருத்திச் சங்கத்தின் உறுப்பினர்கள்  மற்றும் வைத்தியசாலையின் மருத்துவ அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர். அதனையடுத்து, கிண்ணியா தள வைத்தியசாலையின் விஸ்தரிப்புக்காக, வைத்தியசாலையினைச் சூழவுள்ள காணிகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பில், காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது….

Read More

புதிய உறுப்பினர் சிராஜ் பொதுமக்கள் முன்னிலையில் சத்தியப் பிரமாணம்!

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு பாலமுனை மின்ஹாஜ் வட்டாரம் சார்பாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புதிய உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட பாலமுனை 02 ம் பிரிவைச் சேர்ந்த எச்.எம்.சிராஜ் நேற்று (12) மாலை பொதுமக்கள் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். சின்னப்பாலமுனை றியாழுல் ஜென்னா ஜூம்ஆப் பள்ளிவாயலில், நம்பிக்கையாளர் சபைத் தலைவர் ஏ. உதுமாலெவ்வை தலைமையில் பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபை மற்றும் ஊர்ப்பிரமுகர்கள், பொதுமக்கள் முன்னிலையிலேயே அவர் பிரதேச சபை உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்….

Read More

 “யுத்தத்தால் பாதிக்கப்பட்ட விதவைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த கைப்பணித் தொழிலை ஊக்குவிக்கும் திட்டம் தொடர்ந்தும் நடைமுறை” கொழும்பில் அமைச்சர் ரிஷாட்!

வடக்கு – கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட விதவைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக, ஜப்பானைத் தளமாகக் கொண்ட சர்வதேச ஆராய்ச்சி நிலையம், அந்தப் பிரதேசத்தின் பாரம்பரிய நெசவு உற்பத்தி மற்றும் பெண்களுக்கான கைப்பணித் தொழிலை ஊக்குவிக்கும் வகையில், தற்போது நடைமுறைப்படுத்தி வரும் செயற்திட்டத்தை 2019ஆம் ஆண்டு வரை நீடித்திருப்பதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் தேசிய அருங்கலைகள் பேரவையின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வரும் இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தியதற்கும், நீடித்தமைக்கும் சர்வதேச…

Read More