Headlines

மன்னார் கிராமங்களின் அபிவிருத்திக்கு 13 கோடி ரூபா அமைச்சர் ரிஷாட்டினால் ஒதுக்கீடு!

மன்னார் பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களின் துரித அபிவிருத்திக்காக 12 கோடியே 96 இலட்சம் ரூபா நிதியினை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஒதுக்கியுள்ளார். மன்னார் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிரின் வேண்டுகோளுக்கிணங்கவே, அமைச்சரின் விஷேட நிதியிலிருந்து குறிப்பிட்ட தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. மன்னார் பிரதேச சபை இம்முறை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நிருவாகத்தின் கீழ் வந்துள்ளதை அடுத்து, அக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் தவிசாளர் முஜாஹிர், மன்னார் பிரதேசத்தில் அமைந்துள்ள கிராமங்களின் குறைபாடுகளையும், மக்களின்…

Read More

“திருகோணமலை, கப்பல்துறையில் மக்களின் காணிகள் கபளீகரம் செய்யப்படும் நிலை காணப்படுகிறது” – அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பி!

கப்பல்துறை கிராம மக்களின் காணிகள் கபளீகரம் செய்யப்படுகின்ற நிலைமை காணப்படுகின்றதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்துள்ளார். திருகோணமலை – கப்பல்துறை கிராமத்தில் நேற்று முன்தினம் (11) அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் புதிய வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். கப்பல்துறை கிராமத்தின் 3/2 பங்குகளை துறைமுகங்கள் அதிகாரசபை கபளீகரம் செய்துள்ளது. எனவே, மக்களுடைய தனியார் காணிகளை…

Read More

அனுராதபுர மக்களின் குடிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் இஷாக் எம்.பியினால் பல்வேறு திட்டங்கள்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் சொந்த நிதியிலிருந்து, பதவிய பிரதேச செயலகத்துக்குட்பட்ட பிசோகொட்டுவ மரனாதார அமைப்பிற்கு நேற்று முன்தினம் (10) குடிநீர் வசதி பெற்றுக்கொடுக்கப்பட்டது. அத்துடன், நொச்சியாகம பிரதேச செயலகத்துக்குட்பட்ட வல்பொலகம கிராம மக்களின் குடிநீர் பிரச்சனைகளை தீர்க்கும் வகையில், குடிநீர் செயற்திட்டத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று முன்தினம் (10)  இடம்பெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சர் ஹெரிசன், இஷாக் ரஹுமான் எம்.பி, தாரிக் உட்பட பலர் கலந்துகொண்டனர்.  

Read More

திருகோணமலையில் 8000 மீற்றர் கொங்ரீட் வீதிகள்- அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பி

திருகோணமலை மாவட்டத்தில் 8000 மீற்றர் கொங்ரீட் வீதிகள் அமைக்கும் வேலைத்திட்டம் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூபின் முயற்சியில், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பங்கேற்புடன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் விசேட நிதியோதிக்கீட்டில் மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலக பிரிவுகளிலும் இவ் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன. பிரதேச மக்களினால்,  அப்துல்லாஹ் மஹ்ரூபின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட பெரும்பாலான மணல், கிரவல் வீதிகள் இத்திட்டத்தில் கொங்ரீட் வீதிகளாக அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

“யாழில் மாட்டிறைச்சி கடைகளை மூடுவது வீண் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது” கே.எம் நிலாம்!

மாட்டிறைச்சி கடைகளை மூட மேற்கொள்ளும் நடவடிக்கையில் பெரும் சந்தேகம் நிலவுகிறது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் யாழ் மாநகர சபை உறுப்பினர் கே.எம் நிலாம் குறிப்பிட்டார். நல்லூர் பிரதேச சபையில் நேற்று (11) மாட்டிறைச்சி கடைகளை தடை செய்வது குறித்து மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் தொடர்பில் அவர் மேற்கண்டவாறு கூறினார். மாட்டிறைச்சியை முஸ்லீம் மக்கள் அதிகமாக நுகர்வதை யாவரும் அறிவர். யாழ்ப்பாணத்தை பொறுத்தமட்டில் அநேகமான இறைச்சிக்கடைகளை குத்தகை அடிப்படையில் பெற்று நடாத்துவது முஸ்லீம் மக்களாகும். இவ்வாறான சந்தர்ப்பத்தில்…

Read More

“மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காகவே சுயதொழில் ஊக்குவிப்புத் திட்டங்கள்” புத்தளத்தில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!!!

மக்களின் வாழ்க்கை தரத்தையும் வருமானத்தையும் அதிகரித்து, அவர்களின் வாழ்விலே மலர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவே சுயதொழில் வாய்ப்புக்கான ஊக்குவிப்பு உதவிகள் வழங்கப்படுவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். புத்தளம் பிரதேச செயலகத்தில், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான நிறுவனங்களின் உதவியுடன் வழங்கப்பட்ட சுயதொழில் முயற்சியாளர்களுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் கலந்துகொண்டார். புத்தளம் பிரதேச செயலாளர் சஞ்சீவனி ஹேரத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்…

Read More