“புதிய இலங்கை கணக்காய்வு நியமங்கள் நோர்டிக் (NORDIC) நாடுகளின் மாதிரியைக் கொண்டுள்ளது” அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!!
ஒப்பிடத்தக்க தேசிய கணக்கியல் மற்றும் கணக்காய்வு கட்டமைப்பை அபிவிருத்தி செய்வதற்கு இலங்கைக்கான முயற்சிகளை உலக வங்கி ஆதரிக்கின்ற அதேவேளை, உலகச் சந்தைகளில் எங்கள் முறைசாரா துறையை இணைப்பதற்கு புதிய இலங்கை கணக்காய்வு நியமங்களின் அறிமுக நிகழ்ச்சி ஒரு பாரிய படியாகும் என்று நான் நம்புகிறேன் என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பட்டியலிடப்படாத வர்த்தக நிறுவனங்களின் கணக்காய்வு நியமங்களுக்கான வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அமைச்சர் இதனைச் சுட்டிக்காட்டினார். கொழும்பிலுள்ள இலங்கை பட்டய…
