சமூக சேவைக்கான அமைப்பை உருவாக்க கைகோர்க்குமாறு புத்தளம் அரசியல்வாதிகள், தனவந்தர்களுக்கு பிரதேச சபை உறுப்பினர் ஆஷிக் அழைப்பு!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் ஆஷிக்கின் சொந்த நிதியோடு மேலும் அவரின் உறவினர்கள், நண்பர்களிடம் நிதி சேர்த்து ஒரு வீட்டினை அமைத்துக்கொடுக்கும் ஏற்பாட்டின் அடிப்படையில், அவ்வீட்டுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு வீட்டின் உரிமையாளரினால் (28) ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர் ஆஷிக் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவிக்கையில், ஏழைகளுக்கான உதவிகளை மேற்கொள்ள ஓர் பொதுவான அமைப்பு ஒன்று அத்தியவசியமாகும். இவ்வாறான அமைப்புக்கள் எமது தொகுதியில் குறைவு. அதிலும் எம் சமூகத்திற்கு…
