பேராசிரியர் ஹஸ்புல்லாஹ்வின் மறைவு தொடர்பாக பிரதியமைச்சர் அமீர் அலி வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தி!
முஸ்லிம் சமூக ஆய்வாளரும், நூலாசிரியருமான பேராசிரியர் ஹஸ்புல்லாஹ்வின் மறைவு செய்தி கவலையடைந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், மீன்பிடி நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். பேராசிரியர் ஹஸ்புல்லாஹ்வின் மறைவு தொடர்பாக வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் பிரதியமைச்சர் மேற்சொன்னவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்- எருக்கலம்பிட்டியைப் சேர்ந்த பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் கல்வி துறையில் சிறந்த கல்விமானாக திகழ்ந்தார். இவர் 1990ம் ஆண்டு இடம்பெயர்ந்த வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் மற்றும்…
