உளுக்காப்பள்ளம் பாடசாலைக்கு பிரதேச சபை உறுப்பினர் ஆஷிக்கின் நிதியுதவியில் சிற்றூண்டிச்சாலை!
புத்தளம், உளுக்காப்பள்ளம் பாடசாலை நிர்வாகத்தினரினதும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கரம்பை வட்டார அமைப்பாளர் தன்வீரினதும் வேண்டுகோளுக்கிணங்க, கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் ஆசிக் உளுக்காப்பள்ளம் பாடசாலைக்கு அண்மையில் (07) விஜயம் செய்திருந்தார். இதன்போது, பாடசாலையில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில், பாடசாலை நிர்வாகத்தினர் உறுப்பினர் ஆஷிக்கிடம் முன்வைத்தனர். அந்தவகையில், விஷேடமாக பெண்களுக்கென்று ஓர் தனியான சிற்றுண்டிச்சாலையை அமைப்பதற்கான தேவைப்பாடு காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினர். அவற்றைக் கேட்டறிந்துகொண்ட உறுப்பினர் ஆஷிக், தனது சொந்த நிதியிலிருந்து சிற்றுண்டிச்சாலை அமைப்பதற்கான வேலையை…
