Headlines

அனுராதபுரம், நெலுபாவ பிரதேச மக்களுக்கு பொது குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கி வைப்பு!

நீண்டகாலமாக சுத்தமான குடி நீர் பிரச்சினைக்கு முகங்கொடுத்து வரும் அனுராதபுரம்  நாச்சாதுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட நெலுபாவ பிரதேச மக்களுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித்தலைவரும், அனுராதபுர  மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான  இஷாக் ரஹுமானின் நிதியொதுக்கீட்டில் பொது குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரமொன்று வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்றைய தினம் (02) இடம்பெற்றது. இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தரும், தொழிலதிபருமான தாரிக் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.  

Read More

“தாய்மார்கள் வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாகச் செல்வது சமூகத்தை நேரடியாகப் பாதிக்கின்றது” பொலன்னறுவை, கலெல்லயில் அமைச்சர் ரிஷாட்!

பாடசாலைகளின் வளங்களையும், கட்டிடங்களையும் பெருக்குவதில் நாம் அக்கறை காட்டும் அதேவேளை, மாணவர்களை கல்வியில் ஊக்கப்படுத்தி உரிய அடைவு மட்டத்தைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்பதே சமூக முன்னேற்றத்துக்கு வழிவகுக்குமென கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கிளிநொச்சி மற்றும் வன்னி மாவாட்டங்களில் மாணவர்கள் ஓலைக் கொட்டில்களிலும், அகதி முகாம்களிலும் மின்சாரம் உட்பட அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்த போதும், அவர்கள் கல்வியிலே முன்னேற்றமடைந்து வருவதற்கு கல்வி மீது கொண்ட ஆர்வமும், ஊக்கமுமே காரணமாகும் என்று அவர் மேலும்…

Read More

பரீட்சை வழிகாட்டி கருத்தரங்கு தொடர்பான கலந்துரையாடல்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்விப்பிரிவின் ஏற்பாட்டில், குருநாகல் மாவட்டத்தின், தம்பதெனிய தேர்தல் தொகுதியில் இம்முறை புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான பரீட்சை வழிகாட்டி சம்பந்தமான கலந்துரையாடல், கிரி/பொல்கஹயாய முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அண்மையில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான என்.எம்.நஸீர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, பாடசாலையின் குறைபாடுகளை கேட்டறிந்தார். அத்துடன், குளியாப்பிட்டிய பிரதேச சபை பிரதி தவிசாளர் எம்.சி.இர்பான், பிரதேச சபை…

Read More

“கைத்தொழில் பேட்டைக்கான இட ஒதுக்கீடு தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவுகளை அறியப்படுத்தவும்” அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் இஸ்மாயில் எம்.பி!

சம்மாந்துறை பிரதேசத்தின் அபிவிருத்திக் குழு கூட்டம்  பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.இஸ்மாயிலின் தலைமையில் நேற்று (02) பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.  இந்தக் கூட்டத்தில் சம்மாந்துறை மண்ணின் தேவைகள் கருதி இஸ்மாயில் எம்.பி அவர்களினால் பின்வரும் விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டன. சம்மாந்துறை பலநோக்கு கூட்டுறவுச் சங்கதிற்கு சொந்தமான அசையா சொத்துக்களின் விபரங்களையும், அதன் உரிமை தொடர்பான ஆவணங்களையும் கண்டறிதல். கைத்தொழில் பேட்டைக்கான இட ஒதுக்கீடு சம்மந்தமாக இதுவரைக்கும் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக அறியப்படுத்தவும். பொதுமக்களுக்காக வாரத்தில் ஒரு நாளை மண் அகழ்வதற்கான…

Read More

“இனவாதத் தீயை அணைக்கும் செயற்பாடுகளை முன்னிலைப்படுத்துவோம்” பொலன்னறுவை, திவுலான நிகழ்வில் அமைச்சர் ரிஷாட்!

நாட்டிலே திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் இனவாத நடவடிக்கைகளுக்கு தீனிபோடும் சமூகமாக நாங்கள் இருக்காது, அந்த நடவடிக்கைகளை எவ்வாறு அணைக்க முடியுமோ அவ்வாறான செயற்திட்டங்களுக்கு முன்னுரிமையளித்து செயற்பட வேண்டுமென்று கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். “எழுச்சிபெறும் பொலன்னறுவை” அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் தமன்கடுவ, திவுலான அல்/அக்ஸா மஹா வித்தியாலயத்தில், இன்று காலை (03) இடம்பெற்ற புதிய இரண்டுமாடி கட்டிடத்தைத் திறந்துவைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் கலந்துகொண்டார்.   பாடசாலை அதிபர் எம்.எச்.பாஹிர் தலைமையில்…

Read More