வில்பத்து தொடர்பில் சிங்கள மக்களுக்கு பரப்பப்பட்டுள்ள தவறான கருத்துக்களை நீக்குவதற்கு கட்டமைப்பொன்று அவசியம் பெளத்த தேரர்கள் – அமைச்சர் ரிசாத் கலந்தாலோசனை
வில்பத்து தொடர்பில் சிங்கள மக்களுக்கு பரப்பட்டுள்ள தவறான கருத்துக்களை நீக்கி, அவர்களுக்கு உண்மை நிலைகளை தெளிவுபடுத்தும் வேலைத்திட்டத்தை தொடங்குவதற்கென வடமாகாண பெளத்த மத குருமார்கள் அடங்கிய அமைப்பொன்றின் அவசியம் குறித்து வடமாகாணத்தை சேர்ந்த பெளத்த மத குருமார்கள் கருத்து வெளியிட்டனர். வவுனியா ஸ்ரீபோதி தக்ஷினாராமய விகாரையில் அமைச்சர் ரிசாத் பதியுத்தீன் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் வட மாகாணத்தை சேர்ந்த பெளத்த தேரர்களை சந்தித்த போதே, தேரர்கள் இவ்வாறு தெரிவித்தனர். இச்சந்திப்பின் போது வடமாகாண சங்கநாயக்க தேரர் கிரிஇப்பங்கவெவ…
