‘அனைத்து இன மக்களும் இன ஒற்றுமையுடனும், சகோதர மனப்பான்மையுடனும் வாழ்வதற்கு நாம் இறைவனை பிராத்திப்போம்’ பிரதியமைச்சர் அமீர் அலி!
நோன்பு பெருநாளை கொண்டாடும் இப்புனித நாளில் அனைத்து இன மக்களும் இன ஒற்றுமையுடனும், சகோதர மனப்பான்மையுடன் வாழ்வதற்கு அனைவரும் இறைவனை பிராத்திக்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், மீன்பிடி நீரியல்வள மற்றும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார். நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் பிரதியமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இன்று பெருநாளை கொண்டாடும் முஸ்லிம்களாகிய நாம் அனைவரும் ஒரு மாத காலம் பசித்திருந்து, விழித்திருந்து நற்காரியங்களில் ஈடுபட்டது போல் தொடர்ந்தும் எமது மார்க்கம்…
