Headlines

நிந்தவூர் பிரதான பூங்கா புனரமைப்பு!

பொதுமக்கள் தமது ஓய்வு நேரங்களில் சுகாதாரமாகவும், பாதுகாப்பாகவும் பூங்காக்களை பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே, நிந்தவூரில் அமையப்பெற்றுள்ள பூங்காக்கள் புணரமைக்கப்படுவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் தெரிவித்தார். புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு நிந்தவூரின் பிரதான பூங்காவையும், அதனை சூழவுள்ள இடங்களையும் அழகுபடுத்தும் வேலைத் திட்டம், தவிசாளர் தாஹிரின் தலைமையில் இன்று (14) இடம்பெற்ற போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நிந்தவூரை பசுமை நகராக மாற்றும் திட்டங்களில்…

Read More

கிழக்கு மாகாணத்திற்கு இம்மாத இறுதிக்குள் இறால் குஞ்சுகள் வழங்க முடிவு!

கிழக்கு மாகாண இறால் வளர்ப்பு பண்ணையாளர்களுக்கு ஜூன்மாத இறுதிக்குள் இறால் குஞ்சுகளை வழங்குவதாக கடற்தொழில் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட இறால் வளர்ப்பு பண்ணை உரிமையாளர்களுடனான சந்திப்பு நேற்று புதன்கிழமை மாலை (13) கடற்தொழில் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அமைச்சில் இடம்பெற்ற போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார். இக்கலந்துரையாடலில் நெக்டா அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் எஸ்.ரவிக்குமார், நிறைவேற்றுப் பணிப்பாளர் எஸ்.தயாபரன், பிரதியமைச்சரின்…

Read More

இஸ்மாயில் எம்.பியினால் வறிய குடும்பங்களுக்கான உதவித் தொகை வழங்கி வைப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுள்ள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் அவர்களினால், புனித நோன்புப் பொருநாளை முன்னிட்டு, ஏழைகளுக்கு இலவச சேலைகள் மற்றும் உதவித் தொகை வழங்கி வைக்கும் நிகழ்வு, சம்மாந்துறை அல்மர்ஜான் மகளிர் கல்லூரியில் இன்று (14) இடம்பெற்றது. வறுமைக் கோட்டின் கீழ் வாழும் விதவை தாய்மார்கள், வயோதிபப் பெண்கள், விசேட தேவையுடையவர்கள் மற்றும் மாணவர்களுக்கு இந்த உதவித் தொகை இஸ்மாயில் எம்.பியினால்  வழங்கி வைக்கப்பட்டது.

Read More