Headlines

சுயதொழில் முயற்சியாளர்களுக்கு கைத்தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு! நவவி எம்.பி பங்கேற்பு!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் மூலம், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம் நவவியின் ஊடாக ரூபா 02 மில்லியன் பெறுமதியான சுயதொழில் உதவி மானியம் புத்தளம் மாவட்ட கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு நேற்று (26) வழங்கி வைக்கப்பட்டது. “திவியட உதான” சுய தொழில் உதவி திட்டத்தினால் தலா ஒருவருக்கு 50,000 ரூபாவுக்கு உட்பட்ட கைத்தொழில் இயந்திர உபகரணங்கள் புத்தளம், கல்பிட்டி, முந்தல், வனாத்தவில்லு, சிலாபம் மற்றும் மாதம்பை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 86…

Read More

 வரிப்பத்தன்சேனை மஜீட் புரம் வித்தியாலய சுற்றுப்புறச்சூழலை சுத்தப்படுத்த நடவடிக்கை!

-ஊடகப்பிரிவு- இறக்காமம் பிரதேசசபை எல்லைக்குட்பட்ட வரிப்பத்தன்சேனை மஜீட் புரம் பாடசாலை அருகில் உள்ள, “மடுவத்தை” என்ற இடத்தை வேறு இடத்துக்கு மாற்றி, சுற்றுப்புறச்சூழலை சுத்தப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் இறக்காமம் பிரதேச சபை தவிசாளர் கலீலுர்ரஹ்மான், மக்கள் காங்கிரஸின் உபதவிசாளர் நௌபர் மௌலவி உட்பட மக்கள் காங்கிரஸின் பிரதேசசபை உறுப்பினர்களான அன்வர் மற்றும் பாஹிமா ஆகியோரும் கலந்துகொண்டனர். “மடுவத்தை” பாடசாலைக்கு அருகாமையில் இருப்பதால், துர்நாற்றம் மற்றும் சூழல் மாசுறுகின்றது. இதனால்…

Read More

“மக்களின் தேவைகளை அவர்களின் காலடிக்குச்சென்று கேட்டறிந்து பூர்த்தி செய்யவேண்டியது மக்கள் பிரதிநிதிகளின் கடமையாகும்” தவிசாளர் தாஹிர்!

-முர்ஷிட்- வீடு வீடாகச் சென்று வாக்குக்கேட்கத் தெரிந்த தலைமைகள், வெற்றி பெற்றபின் வாக்களித்த மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மறந்துவிடுகின்றனர். அபிவிருத்தி என்ற பெயரில் மக்களின் சரியான தேவைகளை அறியாமல்,  முறையற்ற விதத்தில் அபிவிருத்தி தொடர்பான சில நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். அவை மக்களின் அன்றாட வாழ்க்கைக்குப் பயனற்று  அசெளகரியமாக மாறுகின்றன. இது போன்ற வள விரயங்கள் ஏற்படாமல் மக்களின் கருத்துக்களை உள்வாங்கி, முறையான திட்டமிடலுடன் கூடிய அபிவிருத்திகளையே நாம் செய்ய விழைகிறோம் என நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர்…

Read More

தலைமன்னார் பாதிரியாரை சந்தித்த  தவிசாளர் முஜாஹிர்!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மன்னார் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர், தலைமன்னார் கிராம பங்குதந்தை கிறிஸ்தவ பாதிரியார் அவர்களை சந்தித்துக் கலந்துரையாடினார். இந்த சந்திப்பின் போது கருத்துத் தெரிவித்த தவிசாளர் முஜாஹிர், இம்முறை இப்பிரதேச மக்கள் மட்டுமின்றி அதிகமான பிரதேசங்களில் இன,மத வேறுபாடின்றி அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைமைக்கு, தமது பொன்னான வாக்குகளின் மூலம் மக்கள்  ஆணையைப் பெற்றுக் கொடுத்துள்ளனர். அதற்கு காரணம் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், இனமத வேறுபாடின்றி, மனித நேயத்திற்கு முக்கியத்துவமளித்து…

Read More

 இறக்காமம் அல்/அஷ்ரப் மத்திய கல்லூரிக்கு உப தவிசாளர் நௌபர் விஜயம்!

-ஊடகப்பிரிவு- இறக்காமம் பிரதேச சபையின் உபதவிசாளர் ஏ.எல். நெளபர் மெளலவி, அண்மையில் இறக்காமம் அல் /அஷ்ரப் மத்திய கல்லூரியின் அதிபர், ஆசிரியர்களை  சந்தித்துக் கலந்துரையாடினார். இதேவேளை, பாடசாலையின் கல்வி, அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் பற்றியும் அதிபரோடு கலந்துரையாடிய உப தவிசாளர் நௌபர்,  பாடசாலை மைதானத்துக்கு  அருகாமையில் பார்வையாளர் அரங்கு ஒன்றை அமைத்தல்,மைதானத்தை அழகு படுத்தல் மற்றும்  பொது நூலகம் ஒன்றை அமைப்பது தொடர்பிலும் அதிபர் ஆசிரியர்களுடன் கலந்தாலோசித்தார்.  

Read More

நிந்தவூர் ஜூம்ஆப் பள்ளிவாசலின் புதிய நிர்வாகக் குழுவினருக்கு தவிசாளர் தாஹிர் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்!

-முர்ஷிட்- நிந்தவூர் ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசலின் புதிய நிர்வாகத் தெரிவுக்கான கூட்டம் நேற்று (26) இஷாத் தொழுகையைத் தொடர்ந்து, ஜூம்மாப் பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது. இதன்போது புதிய நிர்வாக சபையின் தலைவராக அல்-ஹாஜ் பாறுக் இப்றாஹிம் தெரிவுசெய்யப்பட்டார். நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர், ஊரின் பிரமுகர்கள் சகிதமாக நேரில் சென்று, ஜும்ஆப் பள்ளிவாசலின் நிர்வாக சபையின் புதிய தலைவர் உள்ளிட்ட நிர்வாகக் குழுவினரைச் சந்தித்து தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். குறித்த நிர்வாகத் தெரிவுக்கூட்டத்தில், உப…

Read More

ஓட்டமாவடி பிரதேச சபையின் அங்குரார்ப்பண நிகழ்வு! பிரதம அதிதியாக பிரதி அமைச்சர் அமீர் அலி பங்கேற்பு!

-முர்ஷித் கல்குடா- அதிகாரம் கொண்ட அரசியல் ஓட்டமாவடி பிரதேசத்தில் இருக்கக் கூடாது என்று சில கல்வியலாளர்கள் இப்பிரதேசத்தில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள், அவர்களை நினைக்கும் போது கவலையாக இருக்கின்றது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், கிராமிய பொருளாதார பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஓட்டமாவடி பிரதேச சபையின் சம்பிரதாய பூர்வமான அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று  வியாழக்கிழமை மாலை (26  சபையின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற போது, பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர்…

Read More

திருமலை ஷண்முகா பிரச்சினையை சமரசமாகத் தீர்த்து வைக்க உதவுமாறு சம்பந்தன் ஐயாவிடம், அமைச்சர் ரிஷாட் வேண்டுகோள்!

-ஊடகப்பிரிவு- சமரசப் பேச்சுவார்த்தையின் மூலம் திருகோணமலை ஷண்முகா அபாயா பிரச்சினைக்கு நியாயமான தீர்வைக்காண உதவுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனுக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் எழுதியுள்ள கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். திருகோணமலை ஷண்முகா இந்து மகளிர் கல்லூரியில் முஸ்லிம் ஆசிரியர்கள், ஹபாயா ஆடை அணிவதில் ஏற்பட்டிருக்கும் சர்ச்சை தொடர்பிலேயே எதிர்கட்சித் தலைவருக்கு, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் எழுதியுள்ள அவசரக் கடிதத்தில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்….

Read More

திருமலை அபாயா சம்பவத்துக்கு காத்திரமான முடிவுகள் எட்டப்பட வேண்டும். தமிழ்த் தலைவர்களின் மௌனம் கவலையளிக்கின்றது என்கிறார் அப்துல்லாஹ் மஹ்ருப் எம்.பி!!!

 -ஊடகப்பிரிவு- திருமலை ஷண்முகா இந்து மகளிர் கல்லூரி பிரச்சினைகள் தொடர்பில் சுமூகமான தீர்வைக் காணும் வகையில் பல்வேறு முயற்சிகளை நாம் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்ற போதும், தமிழ்த் தலைவர்கள், இந்தப் பிரச்சினையை சுமூகமாகத் தீர்ப்பதற்கான காத்திரமான பங்களிப்பை இதுவரை நல்காமல் மௌனம் காத்து வருவதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லாஹ் மஹ்ருப் தெரிவித்தார். குறித்த பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியைகள் அபாயா ஆடையுடன் தமது ஆசிரியப் பணிகளை மேற்கொள்வதற்கு…

Read More