“முக்கூட்டுக்கும் மேற்பட்ட பொய்க்கூட்டின் சதிகளை முறியடித்து முசலி மண்ணை மீட்டெடுத்த அமைச்சர் ரிஷாட் கண்கலங்கி அழுதார்” எஸ். ஹமீத்!
-எஸ். ஹமீத்- “முசலி” மன்னார் மாவட்டத்தின் ஓர் ஓரமாயுள்ள நிலம். சிலாவத்துறை, கொண்டச்சி, பண்டாரவெளி, மறிச்சுக்கட்டி, அகத்திமுறிப்பு, புதுவெளி, கரடிக்குழி போன்ற கிராமங்களைக் கொண்ட பிரதேசம். இந்தப் பிரதேசத்திலுள்ள வில்பத்து சம்பந்தமான விடயத்தை இனவாதிகள் பூதாகாரமாக்கியதால், இலங்கை முழுதும் முசலி பிரபல்யம் பெற்றுவிட்டது. முன்னம் ஒரு காலத்தில் முஸ்லிம் காங்கிரசின் கோட்டையாகவிருந்த முசலிப் பிரதேசம் படிப்படியாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் ஆளுகைக்குள் வந்து விட்டிருக்கிறது. தனது சொந்தத் தாய் வீடு போன்று கருதி இந்தப் பிரதேசத்துக்கு…
