“மக்களின் வாழ்வாதார அபிவிருத்திகளுக்காக எனது அதிகாரத்திற்குட்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளேன்” தவிசாளர் தாஹிர்!
-முர்ஷிட்- கைத்தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியுதீனின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு அமைவாக, நிந்தவூரில் தேவையுடைய மக்களின் வாழ்வாதார அபிவிருத்திகளுக்கென தனது அதிகாரத்திற்குட்பட்ட அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளதாக நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் தெரிவித்தார். இலங்கை புடவை மற்றும் ஆடை நிறுவனத்தின் நிந்தவூர் தையல் பயிற்சி நிலையத்திற்கான விஜயம் ஒன்றை (05) மேற்கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது, இலங்கை புடவை…
