Headlines

பாராளுமன்றத்தில் சமர்பித்த கூட்டிணைக்கும் சட்டமூலத்தை மீளப்பெறுவதாக இஷாக் எம்.பி அறிவிப்பு!

2018 மார்ச் வெள்ளிக்கிழமை 30 ஆம் திகதி தினகரன் பத்திரிகையின் 21ஆம் பக்கத்தில் பிரசுரமான விளம்பரம் ஒன்று சம்பந்தமாக… அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான இஷாக் ரஹ்மான் ஆகிய என்னை சிலர் அணுகி இலங்கையில் இயங்கும் கலாநிலையம் ஒன்றை பாராளுமன்றத்தில் கூட்டிணைப்பதற்கான சட்டமூலம் ஒன்றை பிரேரிக்கும் படியும் அதற்கான ஆவணத்தில் கைச்சாத்திடும் படியும் வேண்டிக்கொண்டனர். சமூகத்தில் உள்ள கலா நிலையங்கள் தரமானதாக இருக்க வேண்டும் என்ற எனது நல்லெண்ணத்தில் தான் அவ்வாறு செய்தேன் .அதற்கு இணங்க பாராளுமன்றத்தில் அதற்கான நடவடிக்கைகளை…

Read More

களுத்துறைவாழ் அன்பு பொதுமக்களே!

-களுத்துறை நகரசபை உறுப்பினர் ஹிஷாம் சுஹைல்- களுத்துறைவாழ் அன்பு பொதுமக்களே! இந்த ஊரில் மக்களின் பாரிய எதிர்பார்ப்பு ஒன்று எம்மால் நிறைவேற்றப்பட வாய்ப்பளித்த வல்ல இறைவனுக்கே புகழனைத்தும் அல்ஹம்துலில்லாஹ்! தேர்தல் மேடைதோறும் நாகரீகத்தின் எல்லா எல்லைகளையும் கடந்து விமர்சிக்கப்பட்ட எமது தலைமையும் கட்சியும் நாமும் இன்று இவ்வூர் முஸ்லிம் சமூகத்தின் மீதான அக்கறையை நிரூபித்துள்ளோம்.எமது வருகை முஸ்லிம் சமூகத்தின் தலைமைத்துவத்தை இல்லாமலாக்கும் என தொண்டைகிளிய கத்தியவர்களின் பொய்யை எமது வருகையின்மூலம் பொய்ப்பித்துள்ளோம். சமூகத்தின் பெயரால் ஆயிரக்கணக்கான வாக்குகளை…

Read More

லிஹினியாகல ரஜமஹா விகாரைக்கு நிதியுதவி வழங்கி வைப்பு!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து கடுகம்பொல, லிஹினியாகல ரஜமஹா விகாரையின் அபிவிருத்திக்கு  ஆறு இலட்சம் ரூபா நிதியுதவி வழங்கப்பட்டது. முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், சதொச நிறுவனத்தின் பிரதித் தலைவருமான எம்.என்.நஸீர் மற்றும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் அன்பாஸ் அமால்தீன் ஆகியோர் விகாராதிபதியிடம் இந்த உதவித் தொகையை  கையளித்தனர்.        

Read More

அநுராதபுரம் பதவிய குளத்தில் மீன் குஞ்சிகள் விடும் நிகழ்வு! இஷாக் எம்.பி பங்கேற்பு!

-ஊடகப்பிரிவு- அநுராதபுரம் பதவிய குளத்திற்கு மூன்று இலட்சம் மீன் குஞ்சிகளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்  பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் பெற்றுக்கொடுத்தார். பதவிய பிரதேச மீனவர்கள் நீண்டகாலமாக எதிர்கொண்ட பிரச்சினைகள் யாவும் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் மற்றும் பதவிய பிரதேச செயலாளர், பதவிய பிரதேச உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் முன்னிலையில் கலந்துரையாடப்பட்டது. மூன்று இலட்சம் மீன் குஞ்சிகளை வழங்கி தீர்வை பொற்றுக்கொடுத்த பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான், அங்கு கலந்துரையாடப்பட்ட ஏனைய பிரச்சினைகளுக்கும்…

Read More

குளியாப்பிட்டிய பிரதேச சபையை மொட்டும், மயிலும் இணைந்து கைப்பற்றியது! பிரதித் தவிசாளராக மக்கள் காங்கிரஸ் இர்பான்!

-ரிம்சி- குருநாகல் மாவட்ட குளியாப்பிட்டிய பிரதேச சபையின் ஆட்சியை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் (மொட்டு), அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் இணைந்து கைப்பற்றிக்கொண்டது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த (மொட்டு) விஜயசிறி ஏக்கநாயக்க 21 வக்குகளைப் பெற்று தவிசாளராகவும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸைச் சேர்ந்த எம்.சி.இர்பான் எதுவித போட்டியுமின்றி, ஏகமனதாகப் பிரதித் தவிசாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.   தவிசாளரை எதிர்த்துப் போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த மஹிந்த புஷ்ப குமார 16 வாக்குகளை மாத்திரமே பெற்றுக்கொண்டார்….

Read More