ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அமைச்சர் ரிஷாட் அவசரக் கடிதம்!
-ஊடகப்பிரிவு- வடக்கு, கிழக்கில் உள்ள வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்புக்களை வழங்கி அவர்களின் குடும்ப வறுமையை போக்குவதோடு, நாட்டின் எதிர்கால அபிவிருத்திக்கு அவர்களின் ஆக்கபூர்வமான பங்களிப்பை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் எழுதியுள்ள அவசரக் கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அமைச்சர் எழுதியுள்ள கடிதங்களில் கூறப்பட்டுள்ளதாவது, நாட்டிலே படித்த இளைஞர் யுவதிகளும், பட்டதாரிகளும் தொழிலின்றி பெரிதும் அவதியுறுகின்றனர். வறுமைகோட்டின் கீழ் வாழும்…
