Headlines

‘சிலாவத்துறை கடற்படை முகாமை அகற்றி, நவீன  நகர நிர்மாணத்தை கச்சிதமாக மேற்கொள்ள நடவடிக்கை எடுங்கள்’ சிலாவத்துறைக் கூட்டத்தில் பிரதமரிடம் அமைச்சர் ரிஷாட் கோரிக்கை!

-சுஐப் எம்.காசிம்-  சிலாவத்துறை கடற்படை முகாமை அகற்றி, அந்த நகரை நவீன முறையில் நிர்மாணிப்பதற்கு உகந்த சூழலை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்தார். முசலிப் பிரதேச சபைக்கு ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, சிலாவத்துறையில் இன்று (05) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமே, அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார். அமைச்சர் இங்கு மேலும் உரையாற்றுகையில், முசலிப் பிரதேசத்தில் மீள்குடியேற்றம் இலகுவாக நடந்துவிடவில்லை….

Read More

“புதிய அரசை உருவாக்கியதில் பாரிய பொறுப்புக்களைச் சுமந்தவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனே” சிலாவத்துறையில் பிரதமர் தெரிவிப்பு!

-சுஐப் எம்.காசிம்- புதிய அரசாங்கத்தை உருவாக்குவதில் அமைச்சர் ரிஷட் பதியுதீன் பாரிய பொறுப்புக்களை சுமந்தவர் என்றும், முசலிப் பிரதேசத்தைக் கட்டியெழுப்புவதில் அவர் அயராது உழைத்து வருகின்றார் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். முசலிப் பிரதேச சபையில், மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, சிலாவத்துறையில் இன்று (05) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். பிரதமர் மேலும் கூறியதாவது, விடுதலைப் புலிகளினால் இந்தப்…

Read More

‘மு.காவின் ஜம்பம் இனியும் பலிக்காது’ வரிப்பத்தான்சேனையில் அமைச்சர் ரிஷாட்!

    -ஊடகப்பிரிவு- 17 வருட காலமாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பேற்றுள்ள ஹக்கீம், முஸ்லிம் சமூகத்தின் அரசியல் அபிலாஷைகளையோ உரிமைகள் பற்றியோ எவ்வித அக்கறையும் செலுத்தாமல், காலத்துக்கு காலம் வாக்களித்து வந்த கிழக்கு முஸ்லிம்களை அரசியல் அநாதைகளாக்கியுள்ளார். எனவே, முதுகெலும்பில்லாதவர்களுக்கு வாக்களித்து, முஸ்லிம் சமூகத்தை தொடர்ந்தும் அநாதைகளாக்க வேண்டாம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இறக்காமம் பிரதேச சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக…

Read More

“இனவாதம் தலை விரித்தாடுவதனாலேயே நாங்கள் வரவேண்டிய நிர்ப்பந்தம்” முஸ்லிம் சமூகம் இனவாதத்தில் நாட்டம் கொண்டதல்ல என அக்குரணையில் அமைச்சர் ரிஷாட்!

-சுஐப் எம்.காசிம்-   நாங்கள் வந்தால் இனவாதம் வந்துவிடும் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், இந்தப் பிரதேசங்களில் இனவாதம் தலை விரித்தாடுவதனாலேயே, நாங்கள் இங்கு வரவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது” என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக கண்டி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, இன்று (04) அக்குரணை 06ஆம் கட்டையில் இடம்பெற்ற மாபெரும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றும் போதே அமைச்சர்…

Read More