‘ஏமாற்றப்பட்டு வரும் சமூகத்துக்கு கைகொடுத்து உதவுவதற்காகவே களத்தில் இறங்கியுள்ளோம்’ கண்டியில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!
-சுஐப் எம்.காசிம்- வடக்கு, கிழக்கை மையாமகக் கொண்டு அரசியல் செய்து வந்த மக்கள் காங்கிரஸ், இம்முறை உள்ளூராட்சித் தேர்தலில் அதற்கு வெளியே போட்டியிடுவது தமது கட்சியை வலுப்படுத்துவதற்காகவோ அல்லது அதிகாரங்களை பலப்படுத்துவதற்காகவோ அல்ல என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கண்டி மாவட்டத்தின் உள்ளூராட்சி சபைகளுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, கண்டியில் இன்று (28) பல்வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்…
