Headlines

மொரவெவ பிரதேச சபை வேட்பாளர்களுடனான சந்திப்பு!

-ஊடகப்பிரிவு- திருகோணமலை மாவட்டம்,  மொரவெவ பிரதேச சபைத் தேர்தலில், ரொடவெவ வட்டாரத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுடனான சந்திப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றினார். இந்த சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் மற்றும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள், வேட்பாளர்கள் என பலர் பங்கேற்றிருந்தனர்.        

Read More

ஹக்கீமின் நிலை 2020 இல் என்னவாகப் போகிறது? அமீர் அலி மருதமுனையில் ஆருடம்!

-ஊடகப்பிரிவு- முன்னாள் இராணுவத் தளபதியும், முன்னாள் ஜனதிபாதி வேட்பாளருமான  சரத் பொன்சேகா “ஜனநாயக கட்சி” என்ற (Democratic Party) பெயரில் கட்சி ஒன்றை அமைத்து அரசியல் செய்தபோது, இடைநடுவில் அந்தக் கட்சியைக் கலைத்துவிட்டு எவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் எம்.பியாக மாறினாரோ, அதே பாணியை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் கடைபிடிக்கத் தொடங்கியுள்ளதாக மாக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான அமீர் அலி தெரிவித்தார். மருதமுனையில் இடம்பெற்ற மக்கள் காங்கிரஸின் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய…

Read More

‘முஸ்லிம் பெண்களின் அரசியல் பிரவேசம் காலத்தின் தேவையாகும்’ டாக்டர்.ஹஸ்மியா!

-ஊடகப்பிரிவு- முஸ்லிம் பெண்கள் அரசியலில் ஈடுபடுவது காலத்தின் தேவையாக இருக்கின்றது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மகளிர் அணித் தேசிய இணைப்பாளர் டாக்டர் ஹஸ்மியா உதுமாலெப்பை தெரிவித்தார். கம்பஹா மாவட்டம், நீர்கொழும்பு பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற மக்கள் காங்கிரஸின் மகளிர் அணி கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், அரசியலில் பெண்களின் பங்களிப்பினை நோக்கும் போது, ஏனைய சமூகத்தைச் சார்ந்த பெண்களுடன் ஒப்பிடுகையில், முஸ்லிம் பெண்கள் அரசியல் விடயங்களில் குறைந்த…

Read More

‘தலைமைப்பதவி எமக்கொரு பொருட்டல்ல’ நிந்தவூரில் அமைச்சர் ரிஷாட்!

-ஊடகப்பிரிவு- நாம் தலைமைப் பதவிக்கு என்றும் ஆசைப்பட்டவர்களல்லர். எமக்கு கட்சி என்பது ஒரு பொருட்டல்ல. ஆனால் எமக்கு தேவையானது சமூகத்தின் நலனை மையப்படுத்திய விடயங்களே. நமது சமூகத்திற்கு எதிர்காலத்தில் ஏற்படப் போகின்ற ஆபத்தினை தடுப்பதற்காக ஐக்கிய மக்கள் கூட்டமைப்பினை உருவாக்கி அதன் தலைமையினை முன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹஸன் அலிக்கு வழங்கியதிலிருந்து நாம் சமூகத்திற்கு நல்லதொரு செய்தியினை சொல்லியிருக்கின்றோம் என வர்த்தக கைத்தொழில் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரிஷாத்…

Read More

மக்கள் காங்கிரஸின் மட்டக்களப்பு மாநகர சபை வேட்பாளர் காரியாலயம் திறப்பு நிகழ்வு!

-ஊடகப்பிரிவு- மட்டக்களப்பு மாநகர சபைத் தேர்தலில் மஞ்சந்தொடுவாய் 16 ஆம் வட்டாரத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் போட்டியிடும் என்.கே.றியாழ் அவர்களை ஆதரித்து அண்மையில் இடம்பெற்ற கூட்டத்தில் மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான அமீர் அலி கலந்துகொண்டார். இதேவேளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வட்டாரக்காரியாலயமும் பிரதி அமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டது.          

Read More

‘பழக்க தோசத்தில் மு.காங்கிரசை ரஊப் ஹக்கீம் ‘வச்சிருக்க’ தொடங்கி விட்டார் மீட்பதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும்’ பசீர் சேகுதாவூத் அழைப்பு!

ரஊப் ஹக்கீம் என்பவர் பழக்க தோசத்தினால்,  மு.காங்கிரஸ் எனும் கட்சியையும் ‘வச்சிருக்க’ தொடங்கி விட்டார் என்று ஐக்கிய சமாதான முன்னணியின் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார். எனவே, எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் ரஊப் ஹக்கீமை எல்லா இடங்களிலும் தோற்கடித்து, அதன் மூலம் ஹக்கீமிடம் சிறைப்பட்டுக் கிடக்கும் மு.காங்கிரசை மீட்டெடுப்பதுதான் தங்களின் கடமை எனவும் அவர் கூறினார். நிந்தவூர் பிரதேச சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பாக, மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று…

Read More

கண்டி மாவட்டத்தின் பாத்ததும்பர பிரதேசபை வேட்பாளர்களுடனான சந்திப்பு!

-ஊடகப்பிரிவு- கண்டிமாவட்டத்தின் பாத்ததும்பர பிரதேச சபை தேர்தலில், உடதலவின்ன மடிகே வட்டாரத்தில் மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களான எஸ். எம். இர்ஷாத் மற்றும் சட்டத்தரணி பைசர் ஆகியோரை ஆதரித்து நேற்று (07) மக்கள் சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பில் மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட இணைப்பாளரும், லக்ஸல நிறுவனத்தின் பணிப்பாளருமான ரியாஸ் இஸ்ஸதீன் மற்றும் வேட்பாள ர்களான மாஹிர் ஆசிரியர், ஹனிப் ஹாஜியார்,லரிப், மற்றும் ஜகத் ஆகியோர் உட்பட மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தனர்.  …

Read More

வவுனியா நகரசபை வேட்பாளர்களை ஆதரித்த கூட்டம்!

-ஊடகப்பிரிவு- எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வவுனியா நகரசபையின் இரண்டாம் வட்டாரத்தில், அகில இலங்கை மக்கள் சார்பில் யானை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களான  முன்னாள் நகர சபை உறுப்பினரும், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வவுனியா மாவட்ட இணைப்பாளருமான அப்துல் பாரி மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் லரீப் ஆகியோரை ஆதரித்து நேற்று (07) பட்டாணிச்சூரில் இடம்பெற்ற கூட்டத்தில் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் உட்பட ஊர்ப்பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.            

Read More

மல்கம்பிட்டி வட்டார மக்களுடனான கலந்துரையாடல்!

-ஊடகப்பிரிவு- சம்மாந்துறை, மல்கம்பிட்டி வட்டாரம், புளக் ஜே மேற்க்கு 02ம் கிராம சேவை பிரிவில், ஸ்டார் லைப் பவுண்டேஷன் ஏற்பாட்டில்  கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. பவுண்டேஷன் தலைவர் எம்.எம்.ரபீக் தலைமையில் நேற்று (07) இடம்பெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களான  முன்னாள் பல்கலைக்கழக உபவேந்தர் எஸ்.எம்.இஸ்மாயில், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ. அமீர், மற்றும் முன்னாள் பிரதேச சபை தவிசாளர் நௌஷாட் உட்பட  ஏனைய  வேட்பாளர்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.      

Read More

‘கல்முனை முதல்வர் பதவியை என்னிடமிருந்து மு.காவினர் பறித்தெடுத்தனர்’ சிராஸ் மீராசாஹிப்!

-எஸ்.அஷ்ரப்கான்- மக்களால் தெரிவுசெய்யப்பட்டு கல்முனை முதல்வரான என்னிடமிருந்த பதவியை 2 வருடங்களில் முஸ்லிம் காங்கிரஸினர் பறித்தெடுத்தார்கள் என முன்னாள் மேயரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளரும்,  லங்கா அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைவருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் கவலை தெரிவித்தார். கல்முனை மாநகர சபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக வட்டாரம் 17ல் போட்டியிடும் எம்.ஐ.எம்.அப்துல் மனாபினை ஆதரித்து இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே சிராஸ்…

Read More