‘அம்பாறை மாவட்டத்தில் 17 வருடங்களாக ஆட்சி செய்து வருகின்ற முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் கொடுத்த ஆணையை நிராகரித்துள்ளனர்’ அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!
பதினேழு வருடங்களாக பாராளுமன்றத் தேர்தலிலே, மாகாண சபைத் தேர்தலிலே மாநகர சபைத் தேர்தலிலே வாக்களித்த மக்கள் அந்தந்தக் காலகட்டத்திலே அபிவிருத்தி பற்றி மேடைகளிலேயே கேட்டிருந்தால், இப்போது தேவைப்படுகின்ற அபிவிருத்தியை எங்களிடம் கேட்க வேண்டிய தேவை இருந்திருக்காது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கல்முனை மாநகர சபையில் பெரியநீலாவணை 2ஆம் வட்டாரத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு) கட்சியில் மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.நெய்னா…
