Headlines

“அக்கரைப்பற்று மாநகர சபை வேட்புமனு நிராகரிப்பில் எந்தவோர் இரகசிய உடன்பாடும் இல்லை” மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் மறுப்பு!

-ஊடகப்பிரிவு- அக்கரைப்பற்று மாநகரசபையின் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் வேட்புமனு நிராகரிப்பு தொடர்பில் எந்தவோர் இரகசிய உடன்பாடும் இல்லையெனவும், சம்மாந்துறை பிரதேச சபையின் தேசிய காங்கிரஸின் வேட்புமனு நிராகரிப்பு மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபையின், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் வேட்புமனு நிராகரிப்பு ஆகியவற்றை சம்பந்தப்படுத்தி கூறப்படும் கதைகள், அப்பட்டமான பொய்யெனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான சந்திப்பு, அம்பாறை மொண்டி ஹோட்டலில்…

Read More

பிரதியமைச்சர் பைசல் காஸிமின் செயலாளர் மக்கள் காங்கிரஸில் இணைவு!

-ஊடகப்பிரிவு- ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினரும், பிரதி அமைச்சருமான பைசல் காசிமின் செயலாளர் அன்வர்தீன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் முன்னிலையில், மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டார். ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில், அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான சந்திப்பு, அம்பாறை மொண்டி ஹோட்டலில் நேற்று (01 ) இடம்பெற்றது. இந்நிகழ்வின் போதே செயலாளர் அன்வர்தீன் மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.    

Read More

‘தனி மரங்கள் தோப்பாகாத நிலையிலேதான், தோப்புக்கள் மூலம் சமூகத்துக்கான விடிவைப் பெற முயற்சிக்கின்றோம்’ ஹனீபா மதனி தெரிவிப்பு!

  -ஊடகப்பிரிவு- கடந்த இரு தசாப்தங்களுக்கு மேலாக அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்திய கட்சிகள் உருப்படியாக எதையுமே செய்யவில்லை எனவும், தங்களது பிரதிநிதித்துவத்தையும், அதிகாரத்தையும் தக்கவைத்துக் கொள்வதற்காகவே போராடி வருகின்றன எனவும், தூய முஸ்லிம் காங்கிரஸின் பிரமுகரும், அக்கரைப்பற்று  மாநகரசபையின் எதிர்கட்சித் தலைவருமான ஹனீபா மதனி கூறினார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு மற்றும் தூய முஸ்லிம் காங்கிரஸ், சிவில் அமைப்புக்கள் இணைந்து உருவாக்கியுள்ள ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில், அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி…

Read More

தம்பலகாமம் பிரதேச சபை வேட்பாளர்களுடனான சந்திப்பு!

-ஊடகப்பிரிவு- தம்பலாகமம் பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களுடனான சந்திப்பொன்று முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எச்.அலீபுல்லாஹ்வின் இல்லத்தில் நேற்று முன்தினம் (31) இடம்பெற்றது. மக்கள் சந்திப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் விவகாரப் பணிப்பாளரும், கிண்ணியா முன்னாள் மேயருமான டாக்டர். ஹில்மி மஹ்ரூப் தலைமையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் தேர்தல் வியூகங்கள் மற்றும் வெற்றிக்கான நகர்வுகள் தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டது.        

Read More

திருகோணமலை மாவட்ட மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களுடனான சந்திப்பில் அமைச்சர் ரிஷாட்!

-ஊடகப்பிரிவு- நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் திருகேணமலை மாவட்டத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில், மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் இன்று மாலை (01) சந்தித்துக் கலந்துரையாடினார். கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கட்சியின் தவிசாளரும், பிரதியமைச்சருமான அமீர் அலி மற்றும் அமைப்பாளர்கள், வேட்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.        

Read More