குருநாகல் மாவட்ட மு.கா முக்கியஸ்தர் மக்கள் காங்கிரஸில் இணைவு!
-ஊடகப்பிரிவு- ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட அமைப்பாளரும், மத்திய குழு உறுப்பினரும், முஸ்லிம் காங்கிரஸின் மூத்த போராளியுமான இக்பால் ஷெரீப் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டார். மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாநகரசபை தலைமை வேட்பாளரும், குருநாகல் மாவட்ட இளைஞர் இணைப்பாளருமான அசார்தீன் மொய்னுதீன் முன்னிலையில், மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்ட அவர் கூறியதாவது, மறைந்த பெருந்தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் பின்னர், இன்றைய காலகட்டத்தில், மக்களுக்கு சேவை செய்யக் கூடிய சேவைத் தலைவனாவும்,…
