Headlines

புத்தளத்தில் ஏற்பட்டுள்ள டெங்கு அபாயம் குறித்தும், அது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கைகள் தொடர்பிலும் புத்தளம் பெரிய பள்ளியில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டார்.

புத்தளத்தில் ஏற்பட்டுள்ள டெங்கு அபாயம் குறித்தும், அது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கைகள் தொடர்பிலும் (13) புத்தளம் பெரிய பள்ளியில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டார். புத்தளம் தள வைத்தியசாலை வெளிக்கள நோயாளிகள் பிரிவுக்கான வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவு விசேட உடற்கூற்று வைத்திய நிபுணர் ஒருவரின் தேவைப்பாடு ஆகியன குறித்தும் இக்கலந்துரையாடலில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. புத்தளம் தள வைத்தியசலையை மறுசீரமைப்பு செய்வதற்கான திட்ட வரைபை தயாரித்து, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன ஊடாக சுமார் 1000 மில்லியன் பெறுமதியான சுகாதார அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் இங்கு தெரிவித்தார். வைத்தியவசதிகளை புத்தள மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் வழங்கும் குவைத் வைத்தியசாலையை மேம்படுத்த தான் நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் ரிஷாட் வாக்குறுதியளித்தார். புத்தளம் மாவட்டத்தில் பாரிய அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு முதற்கட்டமாக அமைச்சர் பைசர் முஸ்தபாவுடன் இனைந்து ரூபா 10 மில்லியன் பெறுதியான செலவில் திட்ட வரைபொன்றை தயாரிக்கவும் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அத்தோடு, சுகாதார உத்தியோகத்தர்கள் உள்ளடங்களாக புத்தளம் நகர சபைக்கும் பிரதேச சபைகக்கும் போதுமான டிரக்டர் உள்ளிட்ட வாகன வளங்களை பெற்றுத்தருமாறும் அத்துடன் புத்தளம் பிரதேச செயலகத்துக்கும், நகர சபைக்கும் நிரந்தர செயலாளர்களையும் புத்தளம் தள வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியை நிரந்தரமாக்குமாறும் அமைச்சரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இந்த சந்திப்பில் பெரியப்பள்ளி தலைவர் ஜனாப் உள்ளிட்ட பள்ளி நிர்வாகிகள், உலமா மின்ஹாஜ் (இஸ்லாஹி), மூத்த ஆசிரியர் நதீர், கிராம சேவகர் ரஸ்மி, ஒமேகா நிறுவனர் நயீம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி, கல்பிட்டி பிரதேச அமைப்பாளர் எஹியா ஆப்தீன், இளைஞர் அமைப்பாளர் இப்ளால் அமீன் ஆகியோருடன் ஊர்…

Read More

‘எதிர் விமர்சனங்களுக்கு அஞ்சினால் மக்கள் பணிகளை தொடர முடியாது’ வவுனியா சூடுவெந்த புலவில் அமைச்சர் ரிஷாட்

வடபுல  முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் மற்றும் வாழ்வாதாரத் தேவைகள் தொடர்பில் நாங்கள் மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சிகளின் பலாபலன்கள் தற்போது படிப்படியாக கிடைக்கத்தொடங்கியுள்ளதாகவும், வடக்கு மீள்குடியேற்றச் செயலணி உருவாக்கம், வரவு செலவுத்திட்டத்தில் வடக்கு முஸ்லிம்களின் நலன்களை அடிப்படையாக கொண்ட நிதிஒதுக்கீடு ஆகியவை முஸ்லிம்களுக்கு கிடைக்கப்பெற்ற  நன்மையாகவே கருதுகின்றோம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா சூடுவெந்த புலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தையல் பயிற்சி நிலைய திறப்பு நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் கலந்துகொண்டார்….

Read More

தேர்தல் காலங்களில் மட்டும் சந்திக்குசந்தி கட்சிக் கிளைகள் முளைக்கும் பரிதாபம்”  வவுனியா ஆனைவிழுந்தானில் அமைச்சர் ரிஷாட்

ஊர் பிரதேசங்களில் சந்திக்கு சந்தி தேநீர்க் கடைகளைத் திறப்பது போன்று தேர்தல் காலங்களில் மட்டும் இந்தப் பகுதிகளுக்கு வந்து முச்சந்திகளிலே கட்சிக் கிளைகளைத் திறந்து, அரசியல் வியாபாரம் செய்பவர்கள் குறித்து எச்சரிக்கையாகவும், அவதானமாகாவும் இருக்குமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார்.      வவுனியா ஆனைவிழுந்தான் முஸ்லிம் வித்தியாலயத்தில், புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களை கௌரவிக்கும் விழாவில் நேற்று (13/ 11/ 2017)  பிரதம விருந்தினராக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பங்கேற்றார். அவர் மேலும் கூறியதாவது, அரசியல்…

Read More

பிரதியமைச்சர் அமீர் அலி தலைமையில் மங்களகம பிரதேசத்தில் விடமைப்பு திட்டம் ஆரம்பம்

செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மங்களகம பிரதேசத்தில் தேசிய வீடமைப்பு வேலைத் திட்டத்தின் செமட்ட செவன வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட வீடமைப்பு அதிகார சபையின் முகாமையாளர் எஸ்.ஜெகநாதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டார். மேலும் அதிதிகளாக தேசிய வீடமைப்பு அதிகார சபையின் பிரதி பொது முகாமையாளர் ஜகத் வன்னியாராச்சி, உதவித் திட்டப் பணிப்பாளர் ஏ.கருணாகரன், ஐக்கிய தேசிய கட்சியின்…

Read More

28 மில்லியன் ரூபா செலவில் தொழில் முயற்சியாளர்களுக்கான தையல் பயிற்சி நிலையங்கள்

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களின் அமைச்சின் கீழான SLITA  நிறுவகத்தின் மூலம் வவுனியா மாவட்ட கிராம இளைஞர், யுவதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தினூடாக தையல் பயிற்சி நிலையங்களை அமைச்சர் றிஷாட் பதியுதீன் நேற்றும் நேற்று முன்தினம்(9,10) அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். சின்னச்சிப்பிக்குளம், பாவற்குளம், சூடுவெந்தபுலவு, சாளம்பைக்குளம், மெனிக்பாம், ஆண்டியாபுளியங்குளம் ஆகிய கிராமங்களில் இந்த நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டன. ஆரம்பிக்கப்பட்டுள்ள ஆறு தையல் பயிற்சி  நிலையங்களில் ஒவ்வொரு நிலையத்திலும் இருபது யுவதிகள் வீதம்  ஆறு…

Read More

“ஊடகங்களின் முன்னே அமர்ந்துவிட்டால் என்னைத் திட்டித் தீர்ப்பதிலேயே தமது நேரத்தை சிலர் விரயமாக்குகின்றனர்” வவுனியாவில் அமைச்சர் ரிஷாட்…

தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களில் சந்தர்ப்பம் கிடைத்துவிட்டால், அரசியல்வாதிகள் சிலர் என்னைத் திட்டித் தீர்ப்பதிலேயே காலத்தையும் நேரத்தையும் வீணாக்குகின்றனர் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா புதிய சாளம்பைக்குளம், அல்/அக்ஸா மக்தபின் முதலாம் வருடப் பூர்த்தி நிகழ்வு, அதன் அதிபர் கே. ரபிவூத்தீன் தலைமையில் நேற்று மாலை (12/ 11/2017) நடைபெற்ற போது, பிரதம அதிதியாக அமைச்சர் ரிஷாட் கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் கூறியதாவது, அரசியல்வாதி என்பவர் மக்கள் பணியாற்றுவதை மையமாக வைத்தே செயற்பட வேண்டும். அந்த…

Read More

வவுனியா சின்ன சிப்பிக்குளம் தையற் பயிற்சி நிலையத் திறப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் 

பெண்களுக்கான சுயதொழிலை மேம்படுத்தும் நோக்கோடு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சினால் வவுனியா சின்ன சிப்பிக்குளம் நிர்மாணிக்கப்பட்டுள்ள தையற் பயிற்சி நிலையத் திறப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன்  கலந்து கொண்டார். இந்நிகழ்வில் வட மாகாணசபை உறுப்பினர் ஜயதிலக, அலிகான் ஷரீப் மற்றும் அமைச்சரின் இணைப்பாளர்களான முத்து முகம்மது, அப்துல் பாரி, ஜிப்ரியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read More

சாய்ந்தமருது நகர சபைக்கு மு.கா. தடை என்பதை மக்கள் உணர்ந்ததே போராட்டங்களுக்கு காரணம்; கலாநிதி ஏ.எம்.ஜெமீல்.

சாய்ந்தமருது நகர சபையை உருவாக்குவதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முழுமூச்சாக பாடுபட்டு வந்தபோதிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குறுக்கே நின்று தடுத்து விட்டதை மக்கள் உணர்ந்து விட்டனர். இதன் காரணமாகவே அங்கு போராட்டங்கள் வலுவடைந்து தொடர்ந்தேர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதி தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீனின் வழிகாட்டலில் அம்பாறை மாவட்டத்தில் 1000…

Read More

நவவி எம் பி யின் நிதி ஒதுக்கீட்டில் தில்லையாடி ரத்மல்யாய அகதியா பாடசாலைக்கு புதிய கட்டிடம்.

தில்லையடி றத்மல்யாய அஹதிய்யா பாடசாலைக்கு பெறுமதிமிக்க கட்டிடம் ஒன்றை தனது நிதி ஒதுக்கீட்டில் வழங்கிவைத்த பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்கள் கடந்த வாரம் அதற்கான அடிக்கல்நாட்டு விழாவில் கலந்துகொண்ட போது…

Read More

தேர்தல் தொடர்பான கருத்தரங்கு நிகழ்வில் மேல்மாகாணசபை உறுப்பினர் மொஹமட் பாயிஸ்

எதிர்வரும் மாகாணசபை தேர்தலுக்காக புதிய தீர்மானங்கள் எடுப்பதற்காக முன் மொழிகள் பற்றிய ஒரு பட்டறை கொழும்பில் நடத்தப்பட்டது இந்த கருத்தரங்கில் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அமைப்பாளரும் மேல்மாகாணசபை உறுப்பினருமான மொஹமட் பாயிஸ் மற்றும் மேல்மாகாணசபை உறுப்பினர் அர்ஷாட் நிஷாம்தீன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Read More

புலமைப்பரிசில் பரீட்சையில் பெற்று சித்தியடைந்த  மாணவியை கௌரவிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக றிஷாட் பதியுதீன்

வவுனியா, ஆனைவிழுந்தான் முஸ்லிம் வித்தியாலயத்தின் 47 வருட வரலாற்றில் முதன் முதலாக தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 159 புள்ளிகளை பெற்று சித்தியடைந்த அஸ்வர் பாத்திமா ஸல்ஹா என்ற மாணவியை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை வளாகத்தில்  இடம்பெற்ற போது பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார். பாடசாலை அதிபர் கே எம் எம் அனீஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், மாகாணசபை உறுப்பினர்களான வி ஜயதிலக, அலிகான் ஷரீப்,…

Read More

அமைச்சர் றிஸாட் அவர்களின் பணிப்புரையின் கீழ் மாவடிப்பள்ளியில் இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கிவைக்கப்படன.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் கைத்தொழில் வர்த்தகத்துறை அமைச்சருமான அல்ஹாஜ் றிஸாட் பதியுதீன் அவர்களின் ஆலோசனையின், வழிநடத்தலின் பிரகாரம் மாவடிப்பள்ளியிலுள்ள மக்களின் கண் பார்வைப் பிரச்சினைக்கான சிகிச்சையும் இலவச மூக்குக் கண்ணாடியும் வழங்கும் நிகழ்வு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாவடிப்பள்ளி மத்திய குழுவின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை பி.ப 4.30 மணியளவில் மாவடிப்பள்ளி அல் அஸ்ரப் மகாவித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்…

Read More