Headlines

நல்லாட்சி அரசாங்கம் 2025 ம் ஆண்டு வரைக்கும் நீடிக்கும்.

நல்லாட்சி அரசு இன்று அல்லது நாளை கவிழ்ந்து விடும் என சிலர் பகல் கனவு காண்கின்றனர். 2025 ம் ஆண்டு வரைக்கும் இந்த நல்லாட்சி அரசாங்கமே ஆட்சியில் நீடிக்கப்போகிறது. ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவும் பிரதமராக ரணில் விக்ரமசிங்கவுமே பதவி வகிக்க போகிறார்கள் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எச்.எம் நவவி தெரிவித்தார். புத்தளம் மன்னார் வீதி புதுக்குடியிருப்பு கிராம சேவையாளர் பிரிவில் பொது மக்களுக்கு துரித கெதியில் சேவைகளை வழங்கும்…

Read More

கிராமிய  பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் அமீர் அலியின் முயற்சியால் போரதீவுப்பற்றில் வாழ்வாதார உதவிகள்.

கிராமிய  பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சரின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுயதொழிலை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறுபட்ட வேலைத் திட்டங்கள் இடம்பெற்று வருகின்றது. இதனடிப்படையில் போரதீவுப்பற்று செயலகப் பிரிவிலுள்ள வறிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பெரியபோரதீவு கலாசார மண்டபத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது. பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் எஸ்.சசிகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி பிரதம அதிதியாக கலந்து கொண்டார்….

Read More

ஷிராஸ் வெளியேறுகிறாரா?

  அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து தான் ஒரு போதுமே வெளியேறப் போவதில்லையெனவும் தன் மீது அரசியல் காழ்ப்புணர்வு கொண்டவர்களும், வங்குரோத்து அரசியல்வாதிகளுமே வீணான அபாண்டங்களை பரப்பி வருவதாக கல்முனை மாநகர முன்னாள் மேயரும் லங்கா அஷோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைவருமான ஷிராஸ் மீரா சாஹிப் அறிக்கையொன்றின் மூலம் உறுதிபட தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து என்னைத் தூரமாக்கி தமது அரசியல் தேவைப்பாடுகளை அடைந்து கொள்ள நினைப்பவர்களே இவ்வாறு…

Read More

குர்தீஸ்தான் கொன்சியூளரிடம் அமைச்சர் ரிஷாட் சந்திப்பு

குர்தீஸ்தான், எர்பில் நாட்டின் இலங்கைக்கான கொன்சியூளர் டாக்டர் அஹமட் ஜலால் அவர்களை கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அமைச்சில் சந்தித்து, பேச்சு நடத்தினார். இரண்டு நாடுகளின் வர்த்தக உறவுகள் மற்றும் பொருளாதார ரீதியிலான பொருளாதார விடயங்கள் தொடர்பில் இருவரும் கலந்துரையாடினர். இலங்கையில்  கோழிப் பண்ணை வளர்ப்பு, சோளகத்தை அரைக்கும் இயந்திர ஏற்றுமதி தொடர்பில் டாக்டர் அஹமட் அமைச்சருடன் பேச்சு நடத்தினார். இலங்கை தொழிலாளர்கள் நன்கு தேர்ச்சி பெற்றவர்கள் என கூறிய டாக்டர் தமது நாட்டில் அவர்களுக்கு…

Read More

அரிசித் தட்டுப்பாட்டை நீக்க 5 இலட்சம் மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி பண்டிகையை முன்னிட்டு 500 அத்தியாவசியப் பொருட்களுக்கு விலை குறைப்பு. ஊடகவியலாளர் ,மாநாட்டில் அமைச்சர் ரிஷாட் அறிவிப்பு 

நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசித் தட்டுப்பாட்டை  கருத்திற்கொண்டு ௦5 இலட்சம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகவும், இந்தியாவிலிருந்து ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கான வேலைத்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டு ஒருதொகுதி அரிசி வந்து சேர்ந்துள்ளதாகவும்  கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்புத் தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டு வரும்  செயற்பாடுகளை விளக்கும் செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய போதே அமைச்சர் ரிஷாட் இந்த தகவலை வெளியிட்டார்….

Read More

அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களின் உதவியின் மூலம் மன்/பிச்சவாணிப நெடுங்குள மக்களுக்கு விடுகள் வழங்கி வைக்கப்பட்டது.

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களின் உதவியின் மூலம்   மன்/பிச்ச வாணிப நெடுங்குள மக்களுக்கு அளக்கட்டில் 45 வீடுகளை பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது ..!! பயனாளிகளுக்கு வீடு கொடுக்கும் நிகழ்வில் கெளரவ அமைச்சர் அவர்களின் மன்னார் மாவட்ட இணைப்புச் செயலாளர் சகோதரர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் மற்றும் மீள் குடியேற்ற செயலனியின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் சகோதரர் முஜீப் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆரம்ப கால போராளிளான சகோதரர் வஸீம் பதுறுத்தீன்…

Read More

மட்டக்களப்பு மாவட்டத்தில் பணத்தை போதைக்காக செலவழிப்பது அதிகமாக காணப்படுகின்றது. பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி

மட்டக்களப்பு மாவட்டத்தில் பணத்தை போதைக்காக செலவழிப்பது அதிகமாக காணப்படுகின்றது. இதனை தடுக்கும் முயற்சியில் தாய்மார்கள் செயற்பட வேண்டும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் போரதீவுப்பற்று செயலகப் பிரிவிலுள்ள வறிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பெரியபோரதீவு கலாசார மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும்…

Read More

முல்லைத்தீவு முஸ்லிம் சிவில் போரத்திற்கும் வட மாகாண சபை உறுப்பினர் யாஸீன் ஜவாஹிருக்குமிடையிலான சந்திப்பு!

முல்லைத்தீவு முஸ்லிம் சிவில் போரத்திற்கும் (MMCF) வட மாகாண சபை உறுப்பினர் யாஸீன் ஜவாஹிருக்குமிடையிலான சந்திப்பு கடந்த வாரம் புத்தளம், நிலாமல்டி மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது முல்லைத்தீவு முஸ்லிம்கள் மீள்குடியேறுவதில் எதிர்கொள்ளும் சவால்கள், காணிப் பிரச்சினைகள், வாக்காளர் பதிவில் எதிர்கொள்ளும் சிக்கல்கள், தமிழ்- முஸ்லிம் உறவைக் கட்டியெழுப்பும் அதேவேளை முஸ்லிம்களின் உரிமைகளை ஜனநாயக வழியில் பெற்றுக் கொள்ளுதல், எம்.எம்.ஸி.எப். இன் எதிர்கால நடவடிக்கைகள் முதலான விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன. இதன்போது போரம் விடுத்த வேண்டுகோள்களை வட மாகாண…

Read More

வாகரையில் நண்டு வளர்ப்பு திட்டத்தை ஆரம்பித்துவைத்த பிரதியமைச்சர் அமீர் அலி

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேசத்தில் நண்டு நகரம் என்ற திட்டத்தில் நண்டு வளர்ப்பை ஊக்குவிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவிற்கு அமைய தேசிய உணவு உற்பத்திக்கான எழுச்சி வாரத்தை முன்னிட்டு மீனவர் புரட்சி தினம் ஓட்டமாவடி மீறாவோடை அமீர் அலி கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்- வாகரையில்…

Read More

புத்தளம் மாவட்டத்தில் கிராமசேவ உத்தியோகத்தர் காரியாலங்களை அமைக்கும் செயற்திட்டத்தின் ஆரம்பித்துவைத்தை நவவி எம்.பி

அரச வேலைத்திட்டங்களின் ஒரு பகுதியாக பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்களின் முயற்சியினால் புத்தளம் மாவட்டத்தில் பல கிராமசேவ உத்தியோக காரியாலங்களை அமைக்கும் செயற்திட்டத்தின் ஒரு பகுதியாக இன்று முசல்பிட்டி கிராமத்தில் கிராமசேவ உத்தியோக காரியாலய கட்டிடத்திட்கான அடிக்கல்நாட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்கள் கலந்துகொண்டதோடு,…

Read More

மகளீர் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முன்வரவேண்டும் பிரதியமைச்சர் அமீர் அலி

அரசியல் மாற்றம், குடும்ப மாற்றம், போதை மாற்றம், பிள்ளைகள் கல்வியில் வளர வேண்டும் என்ற மாற்றங்களை மகளீரை வைத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று நான் எதிர்பார்;க்கின்றேன் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட மகளீர் சுயதொழில் கூட்டுறவுச் சங்க பிரதிநிகளுடனான சந்திப்பு ஒட்டமாவடி பிரதேச சபை மண்டபத்தில் நேற்று நடைபெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்- மது பாவனையில் மட்டக்களப்பு…

Read More

றிஷாட் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு ராஜித சாட்டையடி

வெளிநாடுகளிலிருந்து நிதியுதவியைப் பெற்று இலங்கையில் அமைக்கப்படும் வீடுகளுக்கு அனுமதிபெறத் தேவையில்லை என்றும் வீடுகள் அமைக்கப்படும் காணிகளுக்கு மாத்திரமே அனுமதி பெறப்பட வேண்டுமெனவும் அந்த வகையில் கைத்தொழில் வரத்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் நமது நாட்டில் அமைத்து வரும் வீடுகளுக்கும் எந்தவிதமான அனுமதியும் பெறத்தேவையில்லையென அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இன்று காலை கொழும்பில் இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டிலே, சிங்களப் பத்திரிகை ஒன்றின் ஊடகவியலாளர் ஒருவர் அமைச்சர் றிஷாட் பதியுதீன்…

Read More