சாய்ந்தமருது பிரச்சினைக்கான முழு பொறுப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கபடத்தனமே…
சாய்ந்தமருது பிரச்சினைக்கான முழு பொறுப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கபடத்தனமே தவிர இதில் அமைச்சர் ரிசாத் பதியுதீனையோ, மக்கள் காங்கிரசை குற்றம் சொல்ல முடியாது என அ.இ. மக்கள் காங்கிரசின் உயர்பீட உறுப்பினரும் உலமா கட்சி தலைவருமான முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார். கல்முனை தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக மாநாட்டின் போது அவர் மேலும் கூறியதாவது, சாய்ந்தமருதுக்கான பிரதேச சபை வழங்கப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை. எவ்வாறு சாய்ந்தமருதுக்கான பிரதேச சபை வழங்கப்பட வேண்டும் என…
