இனத்துவேசத்தை பேசும் சில தமிழ் தலைவர்கள் முஸ்லிம்களுடைய வாக்குகளை என்ன மனநிலையில் கேட்க முடியும் ?
இனத்துவேசத்தை பேசும் சில தமிழ் அரசியல் தலைவர்கள் வட கிழக்கு இணைப்பதற்கு மட்டக்களப்பு மாவட்டத்திலே இருக்கின்ற முஸ்லிம்களுடைய வாக்குகளை என்ன மனநிலையில் கேட்க முடியும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் வறிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் திக்கோடை தும்பாலை சிறுகல் உடைக்கும் தொழிலாளர்களுக்கு கூரைத்தகடு வழங்கும் நிகழ்வு தும்பாலை பால முருகன் ஆலய முன்றலில் இடம்பெற்ற போது உரையாற்றுகையில் மேற்சொன்னவாறு தெரிவித்தார்….
