Headlines

றிஷாட் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு ராஜித சாட்டையடி

வெளிநாடுகளிலிருந்து நிதியுதவியைப் பெற்று இலங்கையில் அமைக்கப்படும் வீடுகளுக்கு அனுமதிபெறத் தேவையில்லை என்றும் வீடுகள் அமைக்கப்படும் காணிகளுக்கு மாத்திரமே அனுமதி பெறப்பட வேண்டுமெனவும் அந்த வகையில் கைத்தொழில் வரத்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் நமது நாட்டில் அமைத்து வரும் வீடுகளுக்கும் எந்தவிதமான அனுமதியும் பெறத்தேவையில்லையென அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இன்று காலை கொழும்பில் இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டிலே, சிங்களப் பத்திரிகை ஒன்றின் ஊடகவியலாளர் ஒருவர் அமைச்சர் றிஷாட் பதியுதீன்…

Read More

மட்பாண்ட உற்பத்தி தொழிலார்களுக்கு உதவிக்கரம் நீட்டிய அமீர் அலி

கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மட்பாண்ட உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில் சக்கப்போர் வழங்கும் நிகழ்வு இன்று (11) ரதிவன்னண் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டு வாழ்வாதார உபகரணங்களை வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் பிரதேச செயலக உதவித் திட்டப்பணிப்பாளர் சசிகுமார் , பிரதி அமைச்சரின் இணைப்பாளர் கன்ணன் , நித்தியானந்தன், மகேந்திரன் மற்றும் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.

Read More

நீண்ட நாள் கனவுகளை நிறைவேற்றினார் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்..

இத்தனை காலமும் கவனிப்பார் அற்று கிடந்த குளியாப்பிடி தொகுதியின் விசினவ கிராமத்தின் பொத்துகர-வாதாகொடுவ பாதையை அமைச்சர் றிஷாட் பதியுதீனின்  நிதி ஒதுக்கீட்டில் காபட்  பாதையாக புனரமைக்கப்படவுள்ளது. இந்த நிகழ்வில்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குளியாப்பிடி தொகுதி முக்கியஸ்தர்கள் மற்றும் முன்னால் மாகாண சபை உருப்பினறும்  லங்கா சதொசயின்  பிரதித் தலைவருமாகிய நஸீர், முன்னால் குளியாப்பிடி பிரதேச சபை உறுப்பினர்  இர்பான், குருவிகொட்டுவ பாயிஸ், நவாவி;ஊர் மக்களும் கலந்து கொண்டார்கள்.

Read More

ஜனாதிபதியின் “மீண்டும் நாம் எழுவோம்-களஞ்சியத்தை நிரப்புவோம்” விஷேட வேலைத்திட்டம்-பிரதம அதிதியாக பிரதியமைச்சர் அமீர் அலி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவிற்கமைய தேசிய உணவு உற்பத்திக்கான எழுச்சி “மீண்டும் நாம் எழுவோம்-களஞ்சியத்தை நிரப்புவோம்” எனும் தொனிப்பொருளிலான வேலைத்திட்டத்தில் நேற்று 10.10.2017ம் திகதி செவ்வாய்க்கிழமை தேசிய உணவு உற்பத்தி புரட்சி மீனவர் தினம் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது. இதனடிப்படையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் மீனவர் புரட்சி தினம் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் பிரதேச செயலக உதவித் திட்டப்பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத் தலைமையில் மீறாவோடை அமீர் அலி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் போது தியாவட்டவான் பிரதேசத்தில்…

Read More

இந்தியாவிலிருந்து முதலாவது தொகுதி அரிசி இலங்கைக்கு வந்தது.

இந்தியாவிலிருந்து 12500 மெற்றிக் தொன்  பச்சை நாட்டு அரிசி, இன்று (10) கொழும்புதுறைமுகத்துக்கு வந்து சேந்துள்ளதாக கைத்தொழில் வர்த்தக அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இலங்கையில் ஏற்பட்ட அரிசித்தட்டுப்பாட்டை அடுத்து அமைச்சரவையின் வாழ்க்கைச் செலவு உபகுழு மேற்கொண்ட முடிவுக்கமைய இலங்கை அரசாங்கம் இந்திய தனியார் துறையினரிடம் இருந்து 72000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கான உடன்படிக்கையொன்றை கைச்சாத்திட்டதையடுத்தே அதன் முதலாவது தொகுதி இன்று கொழும்புத் துறை முகத்துக்கு வந்து சேர்ந்துள்ளதாக அவர் தெரிவித்தார். “அரிசித் தட்டுப்பாட்டை…

Read More