ரோஹிங்யா முஸ்லிம்கள் மீதான காட்டுமிராண்டித்தனத்தை நிறுத்த ஐ.நாவும் சர்வதேச சமூகமும் உடன் தலையிடவேண்டும். அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை
மியன்மாரிலுள்ள ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது அந்த நாட்டு இராணுவம் நடாத்திவரும் காட்டுமிராண்டித்தனமான, எல்லைமீறிய வன்முறைகளை வன்மையாக கண்டித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், சர்வதேச சமூகமும், ஐ.நாவும் மியன்மார்; முஸ்லிம்கள் மீது இடம்பெற்றுவரும் திட்டமிட்ட இனச்சுத்திகரிப்பை கண்டும் காணாததுபோல் இருப்பது வேதனையானது எனவும் தெரிவித்துள்ளார். மியன்மார் வன்முறைகள் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு இலங்கையிலுள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவைக்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கடிதம் ஒன்றையும் அனுப்பிவைத்துள்ளார். சுமார் 400 அல்லது…
