Headlines

ஒரு இலட்சம் மெற்றிக்தொன் அரிசி இலங்கைக்கு வருகின்றது

அடுத்தமாதம் செப்டம்பர் நடுப்பகுதியில் 70ஆயிரம் மெற்றிக்தொன் நாட்டரிசியும், அதன் பின்னர் 30ஆயிரம் மெற்றிக்தொன் சம்பாவும் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படவுள்ளதாக கைத்தொழில் அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். 70ஆயிரம் மெற்றிக்தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் அரசாங்கத்திற்கும், இந்திய தனியார்துறையினருக்குமிடையிலே கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் ஒரு மெற்றிக்தொன் அரிசியை  445டொலருக்கு இந்திய தனியார்துறையினர் வழங்குவதாக அவர் தெரிவித்தார். அத்துடன் 30ஆயிரம் மெற்றிக்தொன் சம்பா அரிசிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கைச்சாத்திடப்படும் என்றும், குறித்தளவு அரிசியும் இந்தியாவின் தனியார்துறையிடம் இருந்தே, ஒரு…

Read More

உயர் தேசிய டிப்ளோமா பரீட்சை ஒத்திவைப்பு

ஹஜ் பெருநாள் தினமான எதிர்வரும் 2ம் திகதி  நடைபெற ஏற்பாடாகியிருந்த உயர் தேசிய டிப்ளோமா பொறியியல் துறையின்;  SLIATE ( ஆங்கில பாடநெறி) பாடத்தை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 9ம் திகதி சனிக்கிழமை நடாத்துவதற்கு இலங்கை உயர் தொழில்நுட்ப நிறுவனம் தீர்மானித்துள்ளதாக நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் ஹிலாரி டி. சில்வா தெரிவித்தார். கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகத்துடன் தொடர்புகொண்டு பெருநாள் தினத்தன்று இந்தப்பரீட்சையை நடாத்துவதால் முஸ்லிம் மாணவர்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்களை எடுத்துரைத்த…

Read More

மூடிக்கிடக்கும் வடக்கு, கிழக்கு தொழிற்சாலைகளை மீளகட்டியெழுப்ப துரித திட்டம் அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு

யுத்த காலத்தில் செயலிழந்து போன வடக்கு கிழக்கிலுள்ள கைத்தொழிற்சாலைகளை வெளிநாட்டு உதவியுடன் மீளக்கட்டியெழுப்பி மீண்டும் அவற்றை இயங்கச்செய்வதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக  கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் மாந்தை சோல்ட் லிமிடட்டின் புதிய நிர்வாக கட்டிடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவும்,  அந்த நிறுவனத்தின் அரச சுற்றுலா விடுதி திறப்பு விழாவும், நேற்று ஞாயிற்றுகிழமை (27.08.2017) அந்த நிறுவனத்தின் தலைவர் எம்.எம். அமீன் தலைமையில் இடம்பெற்ற போதே, பிரதம விருந்தினராக கலந்துகொண்ட அமைச்சர்…

Read More