எல்லை மீள் நிர்ணத்தில் இழைக்கப்பட்ட அநீதி சரி செய்யப்படாவிட்டால் பதவியைத் துறந்தாவது போராட்டம் நடத்துவோம். பாராளுமன்றத்தில் அமைச்சர் ரிஷாட் சூளுரை
நல்லாட்சியை உருவாக்குவதில் மும்முரமாகச் செயற்பட்ட சிறுபான்மை சமூகத்திற்கு எல்லை மீள் நிர்ணயத்தில் கூட அநியாயம் இழைக்கப்படுவதற்கு நாங்கள் ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். உள்ளூராட்சி அதிகாரசபைகள் தேர்தல்கள் (திருத்த) சட்டமூல விவாததில் அமைச்சர் உரையாற்றும் போது மேலும் கூறியதாவது, நான் மிகவும் மன வேதனையுடன் இச்சபையில் உரையாற்றுகின்றேன். மீள எல்லை நிர்ணயத்திற்கான குழுவை அமைச்சர் பைசர் முஸ்தபா அமைத்த போது இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்குமென நாங்கள் மிகவும்…
