மெட்றிட் நெறிமுறையில் புலமைசார் சொத்துப் பதிப்புரிமையை உள்ளீர்ப்புச் செய்ய இலங்கை நடவடிக்கை அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு
இலங்கையானது ‘சர்வதேச மெட்றிட் நெறி முறையின்’ கீழான புலமை சார் சொத்துப் பதிப்புரிமையை இன்னும் ஒரு வருடங்களில் பெற்றுக்கொள்ளும் வகையிலான செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். புலமைச் சொத்துக்கள் ஆலோசனை ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வில் அமைச்சர் உரையாற்றிய போதே இந்த தகவலை வெளியிட்டார். 7 – 11 வரையிலான அங்கத்தவர்களைக் கொண்ட இந்த ஆணைக்குழுவின் தலைவராக சட்ட விற்பன்னரும், இந்தத் துறையில் நிபுணத்துவம் பெற்றவருமான கலாநிதி…
