Headlines

அலியார் ஹஸரத்தின் மறைவுக்கு பிரதி அமைச்சர் அமீர் அலி அனுதாபம்

சம்மாந்துறையைச் சேர்ந்த மூத்த உலமா அலியார் ஹஸரத்தின் மறைவுக்கு எனது ஆழ்ந்த கவலையையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் பிரதி அமைச்சருமான எம்.எஸ்எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார். இன்று (19.08.2017) சனிக்கிழமை வபாத்தான இலங்கையின் மூத்த உலமாக்களில் ஒருவரும், சம்மாந்துறை தப்லீகுல் இஸ்லாம் அரபுக் கல்லூரியின் ஸ்தாபகருமான ஷேகுத் தப்லீக் அலியார் ஹஸரத்தின் மறைவை முன்னிட்டு பிரதி அமைச்சர் அமீர் அலி விடுத்துள்ள அனுதாப செய்திலயே மேற்சொன்னவாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் அவர் தொடர்ந்து…

Read More

சம்மாந்துறை பெரிய ஹஸரத்தின் மறைவுக்கு அமைச்சர் றிஷாத் அனுதாபம்

பெரிய ஹஸரத் என எல்லோராலும் கண்ணியமாக அழைக்கப்படும் அல்ஹாஜ் ஷேகுத் தப்லீக் அலியார் ஹஸரத் அவர்கள் வபாத்தான செய்தி தனக்கு கவலை அளிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். சம்மாந்துறையின் மூத்த ஆலிம்களில் ஒருவராகவும் தப்லீகுள் இஸ்லாம் அரபிக் கல்லூரியின் ஸ்தாபராகவும் பணியாற்றிய பெரிய ஹஸரத் சம்மாந்துறை மண்ணின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்ந்தவர். அந்த ஊரின் பெருமையை இவர் மூலம் துலங்கியது என்றால் அதற்கு மாறுபட்ட கருத்துக்களுக்கு இடமில்லை. சம்மாந்துறை…

Read More

நல்ல அரசியல்வாதிகளை தெரிவு செய்யவில்லையாயின் ஏமாற்றுக்காரர்கள் தான் வருவார்கள் – அமீர்அலி

நல்ல அரசியல்வாதிகளை தெரிவு செய்யவில்லையாயின் இறைவனின் தண்டனையாக நமக்கு ஏமாற்றுக் காரர்கள் தான் தலைவர்களாக வருவார்கள் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். மட்டக்களப்பு மாமாங்கம் கடற்புறா மீனவர் அமைப்புக்கு கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு அமைப்பின் தலைவர் எஸ்.அருள்செல்வன் தலைமையில் அமைப்பு கட்டடத்தில் புதன்கிழமை மாலை இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்!…

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதி தலைவர் ஏ எம் ஜெமீல் தலைமையில் மூக்குக் கண்ணாடிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கெளரவ தேசியத் தலைவர் அமைச்சர் ரிஷாட் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக, அதன் பிரதித் தலைவரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமாகிய கொளரவ ஏ.எம்.ஜெமீல் அவர்களின் வறிய மக்களுக்கான 1000ம் இலவச மூக்குக் கண்ணாடிகள் என்னும் திட்டத்திற்கமைவாக, தற்போது19.08.2017 சனிக்கிழமை இரண்டாவது கட்டமாக சாய்ந்தமருது மக்களுக்காக மேலும் 250 மூக்குக் கண்ணாடிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

Read More

தேர்தல் வெற்றிக்காக இனவாதம், மதவாதத்தை உசுப்பி விடுவது சமூக ஒற்றுமையை பாழாக்கும். வவுனியாவில்; அமைச்சர் றிஷாட்.

தேர்தல் வெற்றிக்காக  இனவாதத்தையும் மதவாதத்தையும் உசுப்பி தமது அரசியல் நோக்கங்களை நிறைவேற்ற நினைப்பவர்கள் சமூக ஒற்றுமையை பாழ்படுத்துகின்றார்கள் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். ஈரானிய இஸ்லாமிய குடியரசுக்கான இலங்கையின் தூதுவராக பதவியேற்கவிருக்கும் கலாநிதி மொஹமட் ஷரீப் அனீஸ் அவர்களை பாராட்டும் நிகழ்வு நேற்று மாலை (18.08.2017) வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம் பெற்ற போது பிரதம விருந்தினராக அமைச்சர் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் கூறியதாவது, அரசியல்…

Read More