Headlines

வெற்றிலை ஏற்றுமதியாளர்களின் ‘தீர்வை’ பிரச்சினையை பாகிஸ்தான் அரசு தீர்க்கவேண்டும் பதில் தூதுவரிடம் அமைச்சர் ரிஷாட் வலியுறுத்து

வெற்றிலையை இலங்கையிலிருந்து பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்வதற்காக, அந்த நாடு இறக்குமதி வரியை மேலும் அதிகரித்துள்ளமையால் வெற்றிலை உற்பத்தியாளர்களுக்கு  ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் குறித்து, கைத்தொழில் வர்த்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று காலை (31.07.2017) பாகிஸ்தான் தூதுவர் அஹமட்கான் சிப்றாவிடம் எடுத்துரைத்தார். விளையாட்டுத்துறை அமைச்சர் தயாஸ்ரீ ஜயசேகர தன்னுடன் தொடர்பு கொண்டு, வெற்றிலை உற்பத்தியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில்  எடுத்துரைத்ததாகவும், இந்த விடயத்தை பாகிஸ்தான் அரசாங்கம் சாதகமாக பரிசீலித்து, வெற்றிலை ஏற்றுமதியாளர்களுக்கும், உற்பத்தியாளர்களுக்கும் நன்மை பயக்க வேண்டுமென அமைச்சர்…

Read More

தமிழ்க்கூட்டமைப்புடனான நெருக்கத்தை பயன்படுத்தி முல்லைத்தீவு காணிப்பிரச்சினையை தீர்க்கப்போவதாக கூறியவர்கள் எங்கே? முள்ளியவளையில் அமைச்சர் ரிஷாட் கேள்வி

தமிழ் அரசியல்வாதிகளுக்கும் தனக்குமிடையே இருக்கும் நெருக்கத்தையும் உறவையும் பயன்படுத்தி, முல்லைத்தீவு முஸ்லிம்களின் காணிப்பிரச்சினை மற்றும் மீள்குடியேற்றத்தடைகளை நீக்கப்போவதாக முல்லைத்தீவிலும் வவுனியாவிலும் பகிரங்கமாக உறுதியளித்திருந்த முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றவுப் ஹக்கீம் இற்றைவரை இது தொடர்பில் என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளார்? என மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் கேள்வி எழுப்பினார். முல்லைத்தீவில் நேற்று முன்தினம் (29.07.2017) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் கூறியதாவது, ‘வன்னி அமைச்சரின் பிழையான அணுகுமுறைகளாலும், அவரது…

Read More

வாழைச்சேனை கடதாசி ஆலை புனரமைப்பு செய்யப்படவுள்ளது.

வாழைச்சேனை கடதாசி ஆலை கொரிய நாட்டு நிதி உதவியுடன் புணரமைப்பு செய்யப்படவுள்ளதாக கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான றிஸாட் பதியுதீன் தலைமையில் நேற்று (புதன்கிழமை) இடம் பெற்ற கலந்துரையாடலில் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்,வாழைச்சேனை கடதாசி ஆலையின் முன்னாள் நிறைவேற்று தவிசாளர் மங்கள செனரத், கொரிய நாட்டின் சார்பாக கிம்…

Read More

பெண்களின் விகிதாசாரம் 25 வீதமாக இருக்க வேண்டும் என்பதால் அரசியல்கட்சியினர் மகளீரை தேடிவரும் காலம் வரவுள்ளது எம்.எஸ்.எஸ்.அமீர் அலி

உள்ளுராட்சித் தேர்தலில் பெண்களின் விகிதாசாரம் 25 வீதமாக இருக்க வேண்டும் என்பதால் அரசியல்கட்சியினர் மகளீரை தேடிவரும் காலம் வரவுள்ளது என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஏறாவூர் அல் ஜுப்ரியா வித்தியாலயத்தில் இடம்பெற்ற மகளிர் அமைப்பின் 13 ஆவது வருட நிறைவு நிகழ்வில் அவர் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையல், பிரதேசத்தில் பல முன்னேற்றகரமான செயல்களை செய்யும் பெண்களை கண்டுகொள்ளாத கட்சியினர் தற்போது…

Read More

அரசியல் தீர்வில் அதியுச்சத்தைக் கோருவோர், முஸ்லிம்களை மிதிக்க நினைப்பது ஏன்? முல்லைத்தீவில் அமைச்சர் றிஷாட்

வடக்கு முதலமைச்சர் உட்பட முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுமொத்த அரசியல்வாதிகள் இந்தப்பிரதேச மக்களுக்கு மேற்கொண்ட சேவைகளைக் காட்டிலும், தானும் தனது அணியும் மிகவும் நேர்மையான முறையில் கனதியான, காத்திரமான அதிகளவு பணிகளை செய்துள்ளதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். முல்லைத்தீவு, முள்ளியவளை நீராவிப்பிட்டியில் மீள்குடியேற்ற விசேட செயலணி ஊடாக வீடமைப்புக்கான நிதி உதவிகள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார். பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், மாகாண சபை உறுப்பினர் யாசீன் ஜவாகிர்,…

Read More