வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தொழிற்றுறை திட்டங்கள்- அமைச்சர் றிஷாட்.
யுத்தத்தால் பாதிப்படைந்து நலிவுற்று வாழும் வடக்கு கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப கைத்தொழில் வர்த்தக அமைச்சு மேற்கொண்டு வரும் தொழிற்றுறைத் திட்டங்களை மேலும் விரிவுபடுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுபீட்சம் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என்று அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான தேசிய அருங்கலைகள் பேரவையினால் மன்னார் நானாட்டான் பிரதேசத்தில் உள்ள நறுவிலிக்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள பனம் பொருட்கள் உற்பத்திக் கிராமம் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் கலந்து கொண்டார்….
