இனவாதிகளுக்கு தீனி போடும் ஹக்கீம் முஸ்லிம் விரோதப் பேரணிக்கு கூறும் பதில் என்ன? அப்துல்லாஹ் மஹ்ருப் எம்.பி கேள்வி!
முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தைத் தடுப்பதிலும் மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீனை வீழ்த்துவதிலும் சிங்கள இனவாதிகளும் தமிழ் இனவாதிகளும் இணைந்து திட்டமிட்டுச் செயற்படுவது இப்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளதாகவும் இவர்களின் இனவாத நடவடிக்கைகளுக்கு தீனி போடும் வகையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் செயற்பாடுகளும் கொச்சைப்படுத்தும் பேச்சுக்களுமே உந்துசக்தியாக அமைகின்றது என்பதும் இப்போது தெளிவாக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ருப் எம்.பி தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது! முல்லைத்தீவில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து அங்கு…
