அரிசித் தட்டுப்பாடு முடிவுக்கு வருகின்றது அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு
அரிசித் தட்டுப்பாட்டை காரணம் காட்டி அரிசியைப் பதுக்கி வைத்து அதன் விலையை இனிமேல் அதிகரிக்காதவாறூ அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுத்துள்ளாதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளர் சிந்தக்க லொக்கு ஹெட்டி தலைமையில் பாகிஸ்தான் மற்றும் பர்மாவுக்குச் சென்ற தூதுக்குழு அந்த நாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி தொடர்பான பேச்சுவார்த்தைகளை முடித்து விட்டு இன்று (140 காலை நாடு திரும்பியிருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். பாகிஸ்தானிலிருந்து 25000 மெற்றிக் தொன் அரிசியையும் பர்மாவிலிருந்து…
