அரிசி இறக்குமதிக்காக தொழில்நுட்பக் குழு ஒன்று வெளிநாடுகளுக்கு பயணம் இரண்டு லட்சம் மெற்றிக்தொன் அரிசியை இறக்குமதி செய்ய முடிவு
வெளிநாட்டிலிருந்து அரிசியை இறக்குமதி செய்வது தொடர்பில் நான்கு வெளிநாட்டு தூதுவர்களுடன் கொழும்பில், தான் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து அரிசி வகைகளின் மாதிரிகளை பரீட்சிப்பதற்காக அதிகாரிகள், உணவுப் பண்டங்கள் தொடர்பான தொழில்நுட்பவியலாளர்கள் அடங்கிய நிபுணர் குழு ஒன்று மூன்று நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இந்த நடவடிக்கைகள் தொடர்பில் அதிகாரிகளுடன் தாம் கலந்துரையாடியதாக தெரிவித்த அமைச்சர், இந்தோனேசியா, பாகிஸ்தான், பர்மா ஆகிய நாடுகளிலிருந்து ஒரு லட்சம் மெற்றிக் தொன் நாடு, மற்றும் சம்பா அரிசி…
