Headlines

இணைத்தலைவர் பிரதியமைச்சர் அமீர் அலி தலைமையில் பிரதேச ஒருங்கிணைப்பு கூட்டம்…

கோறளைப்பற்று வடக்கு பிரதேச ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று 15.05.2017ஆம் திகதி பிரதேச செயலக மண்டபத்தில் இணைத்தலைவர்களான பிரதி அமைச்சர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் யோகேஷ்வரன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது. பிரதேச அபிவிருத்தி தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது சமுர்த்தி , பாடசாலை ஆசிரியர் பற்றாக்குறை , நட்டு வளர்ப்பு போன்ற விடயங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர்கள் ஶ்ரீநேசன்,மாகாண விவசாய அமைச்சர் துரைராஜசிங்கம், மாகாண சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

Read More

புத்தளத்தின் பலவந்தமான சூழலியற் பாதிப்புகளுக்கு தொடர்ச்சியான பிரதிநிதித்துவம் இல்லாமையையே காரணம். கற்பிட்டியில் அமைச்சர் றிஷாட்

அமைச்சின் ஊடகப்பிரிவு புத்தளம் மாவட்டத்தில் பலவந்தமாக வெளியாரினால் திணிக்கப்பட்டிருக்கும் சூழலியல் ரீதியான செயற்கைப் பாதிப்புகளுக்கு புத்தளத்தின் அதிகாரமிக்க  அரசியல் தலைமையின் நீண்ட இடைவெளியே பிரதான காரணமென்று என்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மக்கள் காங்கிரசின் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை கற்பிட்டியில் அங்குரார்ப்பணம் செய்து வைத்த பின்னர் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் உரையாற்றினார். அமைச்சர் மேலும் கூறியதாவது, கடந்த கால சிறுபிள்ளைத்தனமான செயற்பாடுகளினாலேயே புத்தளம் மாவட்ட பாராளுமன்றக் கனவு சிதைந்து…

Read More